உள்ளடக்கத்துக்குச் செல்

உலக சுங்க அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக சுங்க அமைப்பு
சுருக்கம்WCO
உருவாக்கம்சனவரி 26, 1952; 72 ஆண்டுகள் முன்னர் (1952-01-26)
வகைநாடுகளின் கூட்டமைப்பு
தலைமையகம்
உறுப்பினர்கள்
180 உறுப்பு நாடுகள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரெஞ்சு
பொது செயலாளர்
குனியா முகாரியா (சனவரி 2009 - தற்போது வரை)
வலைத்தளம்www.wcoomd.org
முன்னாள் பெயர்
சுங்க கூட்டுறவு அமைப்பு (CCC)
தலைமையிடக் கட்டிடம்

உலகச் சுங்க நிறுவனம் (World Customs Organization) என்பது பெல்ஜியம், பிரசல்சைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு அரசிடை நிறுவனமாகும். இது சுங்கம் சார்ந்த பொருண்மைகளைப் பற்றிக் கையாள்கிறது. இவற்றில் சரக்கு வகைபாடு,மதிப்பீடு, தோற்ற விதிகள், சுங்க வருவாயைத் தண்டுதல், வழங்கல் தொடர் பாதுகாப்பு, பன்னாட்டுத் தொழில்வணிக விரிவாக்கம், சுங்க உறுதிப்படுத்து நடவடிக்கைகள், அறிதிறன் சொத்து உரிமைகளுக்கு ஆதரவாக ஏய்ப்புகளை வெல்லுதல், சட்டமீறிய மருந்துகளத் தடுத்து நிறுத்தல், முறையான மருந்துகளை ஏய்ப்புகளை வெல்லுதல் போன்ற தலைப்புகளில் பன்னாட்டு மரபுகளையும் வழிமுறைகளையும் கருவிகளையும் உருவாக்குதல் உள்ளடங்கும்;[1] மேலும், இது சல்லமீறிய ஆயுதங்களின் வணிகம், ஒருமைப்பாட்டு மேம்பாடு, சுங்கச் சீர்திருத்தங்களுக்கும் புதுமைப்படுத்தலுக்கும் உதவும் நிலைப்புமிகு திறத்தை வழங்கல் போன்றவற்ருக்கும் பாடுபடும். இந்த அமைப்பு, ஒருங்கியைந்த பன்னாட்டுச் சரக்குப் பெயரீட்டு முறையை உருவாக்கிப் பேணுகிறது; மேலும்நுலக வணிக நிறுவனத்தின் தொழில்நுட்பக் கூறுபாடுகளையும்சுங்க ம்திப்பீட்டு உடன்பாடுகளையும் தோற்ற விதிகளையும் ஆள்கிறது.[2][3]

வரலாறு[தொகு]

ஐரோப்பியப் பொருளியல் கூட்டுறவுக் குழு 1947, ஆகத்து 23 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஆய்வுக் குழுவை(ECUSG), ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இடையே கட்டணம், வணிகத்துக்கான பொது உடன்பாடு பற்றிய விதிகள் சார்ந்த, தொழில்நுட்ப, பொருளியல் சிக்கலை ஆய்வு செய்ய உருவாக்கியது. மொத்தமாக, ஆறு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஆய்வுக் குழுக் கூட்டங்கள் 1947 நவம்பரில் இருந்து 1950 ஜூன் வரை காட்டப்பட்டன.[4] ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஆய்வுக் குழுவின் இப்பணி 1950 இல் மரபுகளை நிறுவும் சுங்கக் கூட்டுறவு மன்றத்தை (CCC), பிரசல்சில் கையெழுத்திட்டு 1953, ஜனவரி 26 இல் ஏற்றது. [5] மரபுகளை நிறுவும் சுங்கக் கூட்டுறவு மன்றத்தின் தொடக்கக் கூட்டத்தில் 17 நிறுவன உறுப்பினர்கள் பங்கேற்றனர். பிறகு மரபுகளை நிறுவும் சுங்கக் கூட்டுறவு மன்றத்தின் உறூப்பினர்கள் உலகின் அனைத்துப் பகுதிகளும்ம் உள்ளடங்க விரிவாக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டில், அதன் தற்போதைய பெயரை, உலக சுங்க அமைப்பு ஏற்றுக்கொண்டது. இன்று உசிநி உறுப்பினர்கள் 182 நாடுகளில் சுங்கக் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பானவர்கள்ரிதில் அனைத்துப் பன்னாட்டு வணிகத்தில் 98% க்கும் அதிகமானவர் உள்ளனர்.[5]

நெடுநோக்கும் குறிக்கோள்களும்[தொகு]

உலகச் சுங்கப் புலமைசான்ற மையமாக உசுநி(WCO) பன்னாட்டளவில் ஏற்கப்பட்டுள்ளது. இது புதிய சுங்க அமைப்புகள், வழிமுறைக்களின் விவாதம், வளர்ச்சி, மேம்பாடு, நடைமுறைப்படுத்தலில் முதனமைப் பாத்திரம் வகிக்கிறது. தன் உறுப்பினர்கலைன் தேவையைச் சந்திக்கிறது. உலக முழுவதற்குமான திறம்பட்ட சுங்க ஆட்சிமுறைக்கு அடிப்படையாக, இதன் செயல்நெறிமுறைச் சூழலும் வழிமுறைகளும் சிறந்த நடைமுறைகளும் சார்ந்த அணுகுமுறைகள் அமைதல் ஏற்கப்பட்டுள்ளது.

உசிநியின் முதன்மையான குறிக்கோள் மற்ற உறுப்பினர்களின் சுங்க ஆட்சிமுறௌயின் திறமையையும் விளைவுறுதிறத்தையும் மேம்படுத்தலேயாகும். இதன்வழி அவர்கள்வெற்றிகரமாகத் தேசிய வளர்ச்சி இலக்குகளான வருவாய் ஈட்டம், தேசியப் பாதுகாப்பு, வணிக உறுதிப்பாடு, சமுதாயப் பாதுகாப்பு, வணிக புள்ளிவிவரங்களைப் பெறுதல் ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்கிறது.

வழிமுறைகள்[தொகு]

அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, உசிநி பல சுங்க வழிமுறைகளையும் ஏற்றுக் கொண்டது. அவை பின்வருபவற்றை மட்டும் உள்ளடக்கியன அல்ல:


  • ஒருங்கியைந்த சரக்கு விவரிப்பு, குறிமுறை அமைப்புக்கான பன்னாட்டு மரபு (ஒஅ மரபு)(HS Convention) 1983 இல் ஏற்கப்பட்டு, 1988 இல் நடைமுறைக்கு வந்தது.இந்த ஒஅ மரபின் பன்னோக்கு சரக்குப் பெயரீடு, சுங்கக் கட்டணங்களுக்கும் பன்னாட்டு வணிகப் புள்ளிவிவரங்களைத் தொகுக்கவும் அடிப்படையாகப் பயன்படுகிறது. இதில் 5,000 சரக்குக் குழுக்க அடங்கியுள்ளன. ஒவ்வொன்றையும் இனங்காண, சீரான வகைபாட்டை அடையும் வகையில் நன்கு வரையறுக்காப்பட்ட விதிகளால் ஆன சட்டவியல், அளவையியலான ஆரு இலக்க குறிமுறை பயன்படுகிறது. இந்த ஒஅ மரபு, வணிகக் கொள்கை, தோற்ற விதிகள், கட்டுபடுத்திய சரக்குகளைக் கண்காணித்தல், உள்ளக வரிகள், வணிகக் கட்டணங்கள் போக்குவரதுப் புள்ளிவிவரங்கள், ஒதுக்கீட்டுக் கட்டுபாடு, விலைக் கன்காணித்தல், தேசியக் கணக்குகளைத் தொகுத்தல், பொருளியல் ஆராய்ச்சியும் பகுப்பாய்வும் போன்ற பல நோக்கங்களுக்கும் பயன்படுகிறது.
  • சுங்க வழிமுறைகளை எளிமைப்படுத்தல், ஒருங்கியைவித்தலுக்கான பன்னாட்டுமரபு(திருத்திய கயோட்டோ மரபுஅல்லது திகம) முதலில் 1974 இல் ஏற்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் 1999 இல் திருத்தப்பட்டது. இந்த திருத்திய கயோட்டோ மரபு 2006 இல்நடைமுறைக்கு வந்தது. இந்தத் திருத்திய திகம பல முதன்மையான ஆளுகை நெறிமுறைகளைக் கொண்டதாகும். இவற்றில் வெளிப்படைத்தன்மையும் சுங்கக் கட்டுபாடுகளை முன்கணித்தல் திறமும் சரக்குகளைஅறிவித்து ஆதரவு நல்கும் ஆவணங்களின் செந்தரமாக்கமும் எளிமைப்படுத்தலும் ஒப்புதல் தரப்பட்டவருக்கான எளிய வழிமுறைகள், தகவல் தொழில்நுட்பத்தின் பெருமப் பயன்பாடு, ஒழுங்குமுறைகளை ஏற்பை உறுதிப்படுத்தும்படிக்கான சிறுமச் சுங்கக் கட்டுபாடுகள், சுங்க இடர் மேலாண்மையையும் தணிக்கைசார் கட்டுபாடுகளையும் பயன்படுத்தல், பிற எல்லை முகமைகளுடன் ஒருங்கிணைந்த குறுக்கீடுகள், வணிகப் பங்காண்மை ஆகியன அடங்கும். இது வணிக வாய்ப்பளிப்பை மேம்படுத்துகிறது;சட்ட விதிமுறைகளின்படிக்கான விளைவுறுதிறக் கட்டுபாடுகளை உருவாக்குகிறது. இதனால், இது எளிய ஆனால் விலைவுமிக்க வழிமுறைகளைப் பயன்படுத்தலை விவரிக்கிறது; மேலும், பயன்படுத்தலுக்கான புதிய கடப்பாட்டு விதிகளையும் கொண்டுள்ளது. உசுநி சர்ந்த இந்தத் திருத்திய கயோட்டோ மரபு சிலவேளைகளில் பன்னாட்டவையின் காலநிலை மாற்றத்துக்கான சட்டக மரபோடு குழப்பிக்கொள்ளப்படுகிறது.
  • ATA மரபும் இசுத்தான்புல் மரபும்(தற்காலிகச் சேர்க்கைக்கான மரபு-இசுத்தான் புல் மரபு). ATA மரபும் இசுத்தான்புல் மரபும் உசுநி வழிமுறைகளாகும். இவை தற்காலிகச் சரக்குகளின் சேர்க்கையை கையாள்கின்றன. இந்த இருமரபுகளின் ஒருங்கிணைந்த ATA முறை எல்லைகளுக்கிடையே கட்டுபாடற்ற சரக்குகள் நடமாட்டத்திற்கு இசைவளித்து, சுங்கமும் வரிகளுமற்ற சுங்கப் பகுதிக்குள் தற்காலிகமாக ஏற்கின்றன. இந்தச் சரக்குகள் ATA கார்னெட் எனும் எளிய ஆவணத்தால் உள்ளடக்கப்படுகின்றன. இந்த ஆவணம் பன்னாட்டு உத்தரவாத முறை காப்புடையதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gelbart, Hannah (16 September 2021). "On the trail of fake medicine smugglers". https://www.bbc.co.uk/news/av/world-africa-58577421. 
  2. "La OMC y la Organización Mundial de Aduanas (OMA)" [The OMC and the World Customs Organization (WCO)]. WTO (in ஸ்பானிஷ்). Organización Mundial de Comercio. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
  3. "Organización Mundial de Aduana (OMA) – Servicio Nacional de Aduana del Ecuador" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  4. Kormych, Borys (in en). THE EUROPEAN CUSTOMS UNION STUDY GROUP: DRAFTING THE EU CUSTOMS LAW. https://www.academia.edu/35465412. 
  5. 5.0 5.1 "Organización Mundial de Aduanas OMA" [World Customs Organization WCO]. Chile Aduanas (Customs) (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சுங்க_அமைப்பு&oldid=3720304" இலிருந்து மீள்விக்கப்பட்டது