உள்ளடக்கத்துக்குச் செல்

உலக கால்நடை ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக கால்நடை ஆண்டு (World Veterinary Year) 2011 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1761 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டிலுள்ள லியோன் [1] நகரத்தில் உலகின் முதல் கால்நடை பள்ளி [2] நிறுவப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உலக கால்நடை ஆண்டு கொண்டாடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 2011 ஆம் ஆண்டு சனவரி 24 அன்று பிரான்சின் வெர்சாய் நகரில் நிகழ்வு தொடங்கப்பட்டது. ஆரோக்கியத்திற்காக கால்நடை, உணவுக்காக கால்நடை, கிரகத்திற்காக கால்நடை என்ற வாசகம் உலக கால்நடை ஆண்டு சுலோகமாக அனுசரிக்கப்பட்டது.[3]

கால்நடை மருத்துவர்களான செனட்டர் யான் என்சைன் மற்றும் கர்டு சிராடர் ஆகியோரின் முன்மொழிவைத் தொடர்ந்து, அமெரிக்கப் பேராயம் 2011 ஆம் ஆண்டை உலக கால்நடை ஆண்டாக அறிவித்தது.[4]

உலக கால்நடை சுகாதார நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு இயக்ககத்தின் பொது இயக்குநரகமும் இணைந்து 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக கால்நடை ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உங்கள் அன்றாட வாழ்க்கையில் கால்நடைகள் என்ற தலைப்பில் ஒரு புகைப்பட போட்டியை நடத்தின.[5] இந்த போட்டியை இந்திய புகைப்படக் கலைஞர் சோமநாத் முகோபாத்யாய் வென்றார். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டின் உடல் வெப்பநிலையை அளவிடும் ஒரு கால்நடை மருத்துவரின் புகைப்படத்தை முகோபாத்யாய் போட்டிக்காக எடுத்திருந்தார்.[6]

தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்

[தொகு]
  • 24 சனவரி 2011: பிரான்சு நாட்டின் வெர்சாய் நகரத்தில் உலக கால்நடை ஆண்டு அதிகாரப்பூர்வமான தொடக்க விழா [1]
  • பிப்ரவரி 2011: அயர்லாந்தின் கால்நடை மன்றம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து கொண்டிருந்த கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பதக்கங்களை வழங்கும் விழாவை நடத்தியது[7]
  • 12–16 மே 2011: பிரான்சு நாட்டின் லியான் நகரத்தில் கால்நடை கல்வி தொடர்பான உலக மாநாடு.[3]
  • அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிசு நகரில் 2011 சூலை 17 அன்று நடைபெற்ற அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கம் மாநாடும் உலக கால்நடை ஆண்டு: விலங்கு மற்றும் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான 250 ஆண்டுகள் என்ற கருத்தரங்கமும் [8]
  • 10–14 அக்டோபர் 2011:தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் பன்னாட்டு நிறைவு விழா[1] alongside the 30th World Veterinary Conference.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "World Veterinary Year". OIE - World Organisation for Animal Health. Archived from the original on 5 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
  2. Jurga, Fran (1 January 2011). "Happy Vet Year! 2011 is World Veterinary Year!". Equus. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
  3. 3.0 3.1 3.2 Nolen, R. Scott (15 August 2010). "Veterinary legislators propose 2011 as World Veterinary Year". www.avma.org. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
  4. "2011 is World Veterinary Year". JAVMA News. 19 December 2010. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
  5. "World Veterinary Year 2011 Photo Competition". Digital Photographer Magazine. 11 February 2011. Archived from the original on 14 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Rinaldi, A (January 2013). "Tackling animal diseases to protect human health. As veterinary science celebrates cattle plague eradication, the inextricable link between human, animal and ecosystem health is increasingly appreciated.". EMBO Reports 14 (1): 31–5. doi:10.1038/embor.2012.201. பப்மெட்:23229587. 
  7. Finegan, Noelle (23 February 2011). "Meath Chronicle - Long service award for Athboy vet". Meath Chronicle இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180114130948/http://www.meathchronicle.ie/news/roundup/articles/2011/02/23/4003294-long-service-award-for-athboy-vet. பார்த்த நாள்: 14 January 2018. 
  8. "Senate Designates 2011 as World Veterinary Year". BloodHorse.com. 15 December 2010. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_கால்நடை_ஆண்டு&oldid=3928077" இலிருந்து மீள்விக்கப்பட்டது