உரோம ரிசி ஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோம ரிசி ஞானம் என்னும் நூல் சித்தர் பாடல்கள் என்னும் தொகுப்பு நூலில் காணப்படும் ஒரு சிறு நூலாகும். இதில் 13 பாடல்கள் மட்டுமே உள்ளளன. இந்த முனிவர் உடம்பு முழுவதும் தலையில் இருப்பது போல் மயிர் உடையவராக விளங்கினார் போலும். [1]

பாடல் எடுத்துக்காட்டு[தொகு]

1

மூலவட்டம் ஆன குரு பாதம் காப்பு

முத்திக்கு வித்தான முதலே காப்பு

மேலவட்டம் ஆன பரப்பிரமம் காப்பு

வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு

காலவட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்

கண்டுபசி ஆற்றி மனக்கவடு நீக்கி

ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம்

நம்பினதால் உரோமன் என்பேர் நாயன்றானே [2]

2


மூடாமல் சிறிது மனப்பாடம் பண்ணி

முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து

வீடேதிங்கு உடலேது யோகம் ஏது

வீண் பேச்சாச் சொல்லி அல்லோ மாண்டு போனார்

காடேறி மலையேறி நதிகள் ஆடிக்

காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்

சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி

சொரூப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே [3]

மேற்கோள்[தொகு]

  1. சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 நூல் 18, உரோம ரிசி ஞானம், நூல் பக்கம் 305
  2. பாடல் 1
  3. பாடல் 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோம_ரிசி_ஞானம்&oldid=2732641" இருந்து மீள்விக்கப்பட்டது