உரோண்டா சுட்டிரவுடு
உரோண்டா சுட்டிரவுடு (Rhonda M. Stroud) (பிறப்பு: 1971)[1]:{{{3}}} ஒரு பொருள் இயற்பியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்க நாவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிகிறார். இங்கு இவர் மீநுண் பொருள்கள் பிரிவின் தலைமையேற்றுள்ளார்.[2]:{{{3}}} இவர் ஒருபால் படிகங்கள், காற்றுக்குழைவு உட்பட்ட மீநுண் கட்டமைப்பு ஆய்வில் பெயர்பெற்றவர்.[3]:{{{3}}} மேலும் இவர் வால்வெள்ளிகள். அண்டத் தூசு ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.[4]:{{{3}}}[5]:{{{3}}} இவர் விண்கல் ஆய்வில் முத்லில் குவிமின்னணுக் கற்றைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முன்னோடியும் ஆவார்.[6]:{{{3}}}
கல்வியும் வாழ்க்கைப்பணியும்
[தொகு]இவர் 1991 இல் தன் இளவல் பட்டத்தைக் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் 1996 இல் தன் முனைவர் பட்டத்தை புனித உலூயிசுஇல் உள்ள வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[3]:{{{3}}} இவர் 1996 இலேயே முதுமுனைவர் ஆய்வாளராக நாவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்தார். பின்னர், இரண்டாண்டுகளில் அங்கேயே அறிவியல் பணியில் அமர்த்தப்பட்டார்.[7]:{{{3}}} இவர் 2016 முதல் 2020 வரை நுண்பகுப்பாய்வியல் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[8]:{{{3}}}
தகைமைகள்
[தொகு]இவர் 1998 முதல் 2010 வரை அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் 2010 இல் தேர்வானார்.[3]:{{{3}}}
இவர் வானிலையியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[8]:{{{3}}}[9]:{{{3}}} சிறுகோளாகிய 8468 உரோண்டா சுட்டிரவுடு 2012 இல் இருந்து இவரது பெயரால் வழங்கப்படுகிறது.[1]:{{{3}}}[2]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "8468 Rhondastroud (1981 EA40)", JPL Small-Body Database, பார்க்கப்பட்ட நாள் 2020-06-07
- ↑ 2.0 2.1 Parry, Daniel (June 20, 2012), NRL Scientist Honored in Naming of Astronomical Body, US Naval Research Laboratory
- ↑ 3.0 3.1 3.2 Bowie, Amanda (June 14, 2010), Dr. Rhonda Stroud Elected Fellow of the American Physical Society, US Naval Research Laboratory
- ↑ Eichner, Cassandra (April 9, 2019), NRL Researcher Ventures to the Antarctic in Search of Cosmic Dust, US Naval Research Laboratory
- ↑ Condliffe, Jamie (August 2014), "NASA Scientists Find The First Interstellar Space Particles", Gizmodo
- ↑ Stroud, Rhonda M.; Nittler, Larry R.; Alexander, Conel M. O'D. (September 2004). "Polymorphism in Presolar Al2O3 Grains from Asymptotic Giant Branch Stars". Science 305 (5689): 1455-1457. doi:10.1126/science.1101099. https://science.sciencemag.org/content/305/5689/1455.abstract. பார்த்த நாள்: 2021-12-20.
- ↑ Niebur, Susan (December 17, 2010), "Rhonda Stroud: Be visible and be involved", 51 Women in Planetary Science, Women in Planetary Science, பார்க்கப்பட்ட நாள் 2020-06-07
- ↑ 8.0 8.1 Executive Council, Microanalysis Society, பார்க்கப்பட்ட நாள் 2020-06-07
- ↑ "Fellows | Meteoritical Society". meteoritical.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
வெளி இணைப்புகள்
[தொகு]- உரோண்டா சுட்டிரவுடு publications indexed by Google Scholar