உருப்பெருக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு பொருளின் உருவத்தை தோற்றத்தில் மாத்திரம் பெருப்பிப்பதே உருப்பெருக்கம் எனப்படும். எனவே உருப்பெருக்கத்தின் மூலம் பொருளின் பௌதிக அளவு பெருப்பிக்கப்படாது. எம் கண்களுக்கு மாத்திரம் பெரிதாகத் தென்படும். உதாரணமாக உருப்பெருக்கமானது உயிரியலில் சிறிய நுண்ணங்கிகளை நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப் பயன்படும்.
உருப்பெருக்கத்துக்கான உதாரணங்கள்[தொகு]
- பூதக் கண்ணாடி சாதாரணமாக அன்றாட வாழ்வில் சிறிய பொருட்களை பெரிதாக்கிக் காட்ட பயன்படுகிறது.
- தொலைநோக்கி தூரத்தில் சிறிதாகக் கண்களுக்குத் தென்படும் பொருட்களை உருப்பெருக்கிக் காட்டும்.
- நுணுக்குக்காட்டியானது மிகச் சிறிய அளவுடைய பொருட்களைப் பார்வையிட உதவும்.
- ப்ரொஜெக்டர் உபகரணமானது கணனித் திரையில் சிறிதாக தென்படுவதை உருப்பெருக்கி பெரிய திரையில் விழச்செய்யும்.