உருபொருள்-உறவு மாதிரி
Appearance
உருபொருள்-உறவு மாதிரி (entity–relationship model - ER model) என்பது கருத்தமைவாக ஒரு சிக்கல் களத்தின் (Problem Domain) தரவு/தகவல் தேவைகளை அல்லது செயலாக்கத் தேவைகளை விபரிக்கப் பயன்படும் ஒரு தரவு மாதிரி ஆகும். இது தரவுத்தள வடிவமைப்பில் மேல்நிலையில் வணிக தரவுத் தேவைகளை பதிவு செய்ய பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. முதலில் உருபொருள்-உறவு மாதிரியாக விபரிக்கப்பட்டு, பின்னர் தொடர்புசால் மாதிரியாக மாற்றப்பட்டு, பின்னர் குறிப்பான ஒரு தரவுத்தளமாக உருவாக்கப்படும்.[1]
உருப்பொருளும் அதன் பண்புகளும் (attributes), உறவுகள் ஆகியன உருபொருள்-உறவு மாதிரியின் முக்கிய கூறுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J.G. Zheng (2010). "Entity Relationship Diagram (ERD): Basics" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.