உருபெருக்கும் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருப்பெருக்கும் கண்ணாடி கண்ணாடி வழியாகப் பார்க்கப்படும் அஞ்சல் தலை.

உருப்பெருக்கும் கண்ணாடி (Magnifying glass) என்பது ஒரு குவி வில்லையாகும். இது ஒரு பொருளின் உருப்பெருக்கப்பட்ட படிமத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வில்லையின் குவியத்திற்கும் வில்லைக்குமிடையே ஒரு பொருளை வைத்தால் அப்பொருளின் படிமம் பெரிதாகத் தெரியும்.

உருப்பெருக்கம் (Magnification ) என்பது ஒளியியல் கருவிகளில் முடிவில் பெறப்படும் படிமத்தின் நீளத்திற்கும் பொருளின் உண்மையான நீளத்திற்குமுள்ள விகிதமாகும்.

ஆதாரம்[தொகு]

  • A DICTIONARY OF SCIENCE__ELBS