உராய்வுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உராய்வுப் போர் அல்லது அரைப்பழிவுப் போர் (War of Attrition) என்பது எதிரியை தோய்வுறச் செய்து தோக்கடிக்கும் ஓரு போர் உத்தி. இது எதிரியின் ஆள் பொருள் உளவுர வளங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுத்தி, "எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம்." தமது வளங்களை திறனான பயன்படுத்தும், கூடிய வளங்களை தக்கவைக்கும் பெற்றுக்கொள்ளும் பக்கம் பொதுவாக வெற்றி பெறும். யார் கூடிய காலத்துக்கு தாக்குப்பிடிக்கின்றனரோ அவர்களே வெற்றிபெறுவர். வியட்னாம் போரில் அமெரிக்கப் படை வியட்னாமிய போராளிகளை தோய்வுறச் செய்து அவர்களின் போரிடும் உறுதியைக் குலைத்து வெல்ல நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தாக்குப்பிடித்தால் அமெரிக்க அரசியல் சமூக மாற்றங்கள் அவர்களுக்கு சாதகமாக மாறி வெற்றியைத் தந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உராய்வுப்_போர்&oldid=3084745" இருந்து மீள்விக்கப்பட்டது