உயிர்மறுசீரமைப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உயிர்மறுசீரமைப்பு (ஆங்கிலத்தில் bioremediation)
சுற்றுச்சூழல் மாசுபடுகளை குறைப்பதற்கும் அல்லது அகற்றுவதற்கும் "உயிருள்ளவற்றை" பயன்படுத்தும் செயல்முறையே "உயிர்மறுசீரமைப்பு" ஆகும். இந்தச் செயல்முறையில் பயன்படும் பெரும்பாலான உயிரினங்களில் நுண்ணுயிரிகளின் பங்கு அதிகமானது.
உயிர்மறுசீரமைப்பின் மூலம் நீர், நிலம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுகளை குறைக்கவோ அல்லது முற்றிலும் அகற்றவோ இயலும்.பெரும்பாலான உயிர்மறுசீரமைப்பு செயல்முறைகள் ஆக்சிஜனேற்ற-இறக்கவினையைச் சார்ந்துள்ளது.
உயிர்மறுசீரமைப்பு தொடர்பான தொழில்நுட்பங்களின் சில எடுத்துக்காட்டுகள்:
- தாவரவழி மறுசீரமைப்பு (ஆங்கிலத்தில் phytoremediation),
- பூஞ்சைவழி மறுசீரமைப்பு (ஆங்கிலத்தில் mycoremediation),
- உயிரிவழி கரைத்தெடுத்தல் (ஆங்கிலத்தில் bioleaching),
- வெளியிட பண்ணையம் (ஆங்கிலத்தில் landfarming),
- உயிரி வினைகலம் (ஆங்கிலத்தில் bioreactor),
- உரப்படுத்தல் (ஆங்கிலத்தில் composting),
- உயிரி ஆக்க வளர்ச்சி (ஆங்கிலத்தில் bioaugmentation),
- தாவர வேர்வழி வடிகட்டுதல் (ஆங்கிலத்தில் rhizofiltration),
- உயிரி தூண்டுதல் (ஆங்கிலத்தில் biostimulation)