உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரனையாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
burr
Bur பழத்தின் மேற்பரப்பில் காணப்படும் சிறிய கொக்கி போன்ற அமைப்புக்களைப் ...
velcro tape
... பார்த்து வெல்க்ரோ கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரனையாக்கம் அல்லது உயிரிகளை ஒத்த ஆக்கம் (biomimetics அல்லது biomimicry) என்பது சிக்கலான மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கத்திற்காக உயிரிகள் மற்றும் இயற்கையின் மாதிரிகள், அமைப்புகள், செயல்பாடுகள், மற்றும் பரிணாம வளர்ச்சிகளை கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து அவற்றை ஒற்றி அல்லது ஒப்ப அல்லது அவை போன்று செய்து தீர்வு காண்பதாகும். இயற்கையாக உயிரினங்கள் புவிசார் காலத்திற்கு ஏற்றவாறு நன்கு வளமான கட்டமைப்புகள் மற்றும் பொருட்களை உருவாக்கியிருக்கின்றன. மனிதர்கள் நம் பிரச்சினைகளை முழுவதும் எதிர்கொள்வதற்கு அல்லது நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, உயிரிகள் மற்றும் இயற்கையைப் பார்த்து, இயற்கையின் சுய-குணப்படுத்தும் திறன், உயிரிகளின் சுற்றுச்சூழல் வெளிப்பாடு, சகிப்புத்தன்மை மற்றும் எதிர்ப்பு ஆகியவைகளை ஆராய்ந்து, பொறியியல் மற்றும் நுட்பவியல் சார்ந்த சிக்கல்களை தீர்த்து, மனித குலம் சிறப்பாக வாழ வழிக்காண்பது உயிரனையாக்கம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரனையாக்கம்&oldid=2651094" இலிருந்து மீள்விக்கப்பட்டது