உயிரணுக்களில் கதிர்வீச்சின் தாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயிரணுக்களில் கதிர்வீச்சின் தாக்கம் (Interaction of radiation on cell ) என்பதனை இரு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1 நேரடி தாக்கம் (Direction action) 2 மறைமுகத் தாக்கம் ( Indirection action)

நேரடித் தாக்கத்தில் கதிர்வீச்சானது உயிரணுக்களில் முக்கிய கதிர் உணர்திறன் மிக்க அணுக்களிலோ அல்லது மூலக்கூறுகளிலோ மோதி அவைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அங்கு உயிரணுக்கள் கதிர்வீச்சீலிருந்து ஆற்றலை நேரடியாக ஏற்றுக் கொள்கின்றன. வேறுவகையில் கூறுவதானால் ,உணர்திறன் மிக்க பருமனளவு செயலற்ற நிலைக்கு மாற இந்த பருமனிலேயே ஆற்றல் ஏற்கப்படுகிறது.

நேரடி விளைவு, இலக்குக் கோட்பாட்டின்( ) அடிப்படையில் விளக்கப்படுகிறது. இங்கு உணர்திறன் மிக்க பருமனளவு இலக்கு எனப்படுகிறது.மோதப்பட்டின் விளைவாக அயனியாக்கம் நிகழ்வது மோதல் எனப்படுகிறது. ஒரே மோதலில் உயிரணுக்கள் செயலிழக்கும் போது ,மீதி உயிர்த்திருக்கும் உயிரணுக்கள் (Surviving fration of cells ) எக்சுபொணன்சியல் விதிக்கட்பட்டு இருக்கும்.

மறைமுகத் தாக்கத்தின் போது உணர்திறன் மிக்க பருமனளவு மற்றொரு பருமனிலிருந்து ஆற்றலைப் பெற்று செயலிழக்கிறது.இந்த இரண்டாவது பருமனளவு நேரடி மோதல் காரணமாக கதிர் வீச்சிலிருந்து ஆற்றலைப் பெற்றிருக்கிறது.

நேரடி தாக்கத்தில் எந்த பருமனளவு செயலிழக்கிறதோ,அது கதிர் வீச்சிலிருந்து நேரடியாக பெறுகிறது. ஆனால் மறைமுகத் தாக்கலில் நேரடியாக அந்த பருமனளவு ஆற்றலை கதிர் வீச்சிலிருந்து பெறுவதில்லை.

மனித உடலில் திசுக்கள் 80 % வரையில் நீரால் ஆனது. இதன் காரணமாக கதிர்வீச்சின் போது அதிக ஆற்றல், முதலில் நீரிலேயே உறைகிறது அல்லது ஏற்கப்படுகிறது. மற்ற பகுதியில் வெகு குறைவாகவே ஏற்கப்படுகிறது. நீர்மூலக்கூறுகள் செயலூக்கம் பெற்று (Activated ) அதன் காரணமாக, அதனை அடுத்துள்ள மற்ற மூலக்கூறுகளுடன் வினைப்படுகின்றன. இதுவே மறைமுகத் தாக்கம் எனப்படுகிறது. செயலூக்கம் நீர்(Activated water ) எனப்படும். எப்போது நீர் மூலக்கூறுகள் கதிர்வீச்சிற்கு ஆட்படுகின்றனவோ அப்போது அயனியாக்கம் கீழ் கண்டவாறு நிகழும்.

 H2 O --radiation----------- H2O+ + e-,

இந்த எலக்ட்ரான் மற்றொரு சாதாரண நீர் மூலக்கூற்றினால் ஏற்கப்பட்டு ஓர் எதிர் அயனியாக மாறும்.அதாவது,

 H2O + e-------------- H2O-,

இவ்வாறு அயனி இணை கிடைக்கப் பொறுகிறது. இவை நிலையானவை அல்ல. உடனேயே அவை பிரிந்து விடுகின்றன..

 H2O+ --------H+ + HO0.
 H2O- --------H0 + HO-.

இந்த வினைகள் காரணமாக இரு தனி செயலூக்கமுடைய ராடிக்கல்கள் கிடைக்கின்றன. அவைகள் H0 & HO0.மற்றவை நிலையானவைகளாகும். தனித்த ராடிகலிலில், தனித்த எலக்ட்ரான் உள்ளது. அது செயலூக்கமுடையது.இதுபோன்ற வைகளின் வாணாள் சில மைக்ரோ விநாடியே ஆகும். இந்த நேரத்தில் அருகிலுள்ள கரிம்ப் பொருட்களைத் தாக்குகின்றன. இதனால் நிலையான அமைப்பினைப் பொறுகின்றன.

 H0 +OH0 ----H2O
 H0  + H0 ----H2,
 OH0  + OH0 ---H2O2 ,
 H0  + O2  ---H0O2.

இரட்டை ஆக்சிஜன் ராடிகல் ,அதிக ஆக்சிஜன் உள்ளபோது பெறப்படுகிறது. இப்படிப் பட்ட வினைகளே உயிரியல் விளைவாக வெளிப்படுகின்றன.

பிஎ.ஆர்.சி. குறிப்புகள்( BARC notes)