உயர மருட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயரத்திலிருந்துப் பார்க்கும் காட்சி

உயர மருட்சி (Acrophobia) என்பது உயரத்தினால் ஏற்படும் அதீத பயம் அல்லது அச்சக் கோளாறு ஆகும். இக்குறைபாடு உள்ளவர்கள் குறைந்த அளவு உயரத்திலேயே உயர மருட்சியை உணர்கிறார்கள். பெரும்பாலான மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லும்போது ஒரு வித பய உணர்வை இயற்கையாகவே உணர்கிறார்கள் இதை விழுந்து விடும் பயம் (fear of falling) என்று அழைக்கபடுகிறது.

மாறாக குறிப்பிட்ட சதவித மக்கள் உயரமான இடங்களுக்கு போகும்போது உயர மருட்சியை உணர்வதில்லை இவர்களை உயரத்திற்கான சிரம் உடையவர்கள் (head for heights) என அழைக்கபடுகிறார்கள். மலை ஏற்ற விளையாட்டு, காற்றாலை மற்றும் வானளாவிகளை (sky crappers) கட்டுதல், பராமரித்தல் போன்ற பணிகளுக்கு இவர்கள் ஏற்றவர்களாக கருதபடுகிறார்கள்.

உயரமான பகுதிகளுக்கு சென்று உயர மருட்சியல் பாதிக்கப்பட்டவர்கள் பீதி தாக்குதலுக்கு உட்பட்டு உடனடியாக பாதுகாப்பாக கீழே செல்ல வேண்டும் என்ற கிளர்ச்சி உணர்வை பெறுகிறார்கள். சுமார் இரண்டு முதல் ஐந்து சதவித மக்கள் உயர மருட்சி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கன்றன இதில் பெண்கள் ஆண்களை போல இரண்டு பங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Juan, M. C. (2005). "An Augmented Reality system for the treatment of acrophobia". Presence 15 (4): 315–318. doi:10.1162/pres.15.4.393. http://users.dsic.upv.es/~mcarmen/docs/PhotoInmer.pdf. பார்த்த நாள்: 2015-09-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர_மருட்சி&oldid=2487062" இலிருந்து மீள்விக்கப்பட்டது