உயர்மட்ட மேகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வளிமண்டலத்தில் 6 கி.மீ. உயரத்திலிருந்து 18 கி.மீ. உயரத்தில் தோன்றும் வெண்மை நிறமுடைய மேகங்கள் உயர்மட்ட மேகங்கள் (high clouds) எனப்படும்.

மேகத்தின் உயரம் மற்றும் உருக அமைப்பு அடிப்படையில் மூன்று வகைகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன: கீற்று மேகம், கீற்றுப்படை மேகம், கீற்றுத்திரள் மேகம்

கீற்று மேகம்[தொகு]

கீற்று மேகம் (Cirrus cloud) வானத்தில் தென்படும் மிருதுவான தன்மை கொண்ட இத்தகையை மேகம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சிதறிக் கிடக்கும் இதன் குறியீடு Ci என்பதாகும். இம் மேகம் இந்தியாவில் 8 கி.மீ உயரத்திற்கு மேலாகக் காணப்படுகிறது. இதனுடைய மூலப்பொருட்கள் பனிபடிகங்களாகும். சுழற்காற்றினால் எற்படும் மேலெழும்பும் காற்றோட்டத்தால் இவ்வகை மேகம் தோன்றுகின்றது. இம்மேகம் நகரும் திசையை அடிப்படையாகக் கொண்டு சூறாவளி நகரம் திசையை அனுமாணிக்கலாம். இதன் சிறப்பம்சம் மழை தருவதில்லை. இது இரண்டு துணை மேகங்களை உடையது.

கீற்றுப்படை மேகம்[தொகு]

கீற்றுப்படை மேகம் (Cirrostrutus cloud) CS எனக் குறியிடப்படும் இம்மேகம் பால் போன்று வெண்மையாக வானம் முழுவதும் பரவிக்கிடக்கும் தன்மையது. மென்மையான, ஒளிபுகும் அமைப்புடையது. வலிமண்டலத்தில் அதிகபட்சமாக 6 கி.மீ. முதல் 18 கி.மீ. வரை உயரம் உடையதாக உள்ளது. சூறாவளியின் போது காற்று சுழற்சியுடன் கூடிய மேல்நோக்கு விசையோடு மிக உயரத்தில் தள்ளப்படுவதன் காரணமாக கீற்று மேகங்களில் இம் மேக வகை தோன்றுகின்றது. இம்மேகங்களால் மழைப்பொழிவு மற்றும் சூறாவளிக்கான வானிலையை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலப் பொருட்கள் பனிப்படிகங்கள் ஆகும். இவற்றின் ஒளிவிலகல் காரணமாக பரிவட்ட நிகழ்வு (Halo pheno mena) தோன்றுகிறது. சந்திரனைச் சுற்றி அமைந்த இப்பரிவட்டங்களைக் கொண்டு சூறாவளி ஏற்படுவதைத் தெரிந்து கொள்ள முடியும். இம்மேகம் இரண்டு துணை மேகங்களை உடையது.

கீற்றுத்திரள் மேகம்[தொகு]

கீற்றுத்திரள் மேகம் (Cirrocumulus cloud) வெண்மை நிறமுடைய சிறு செதில்கள் போலவும் கூட்டமாக மணல் அலைபோலவும் வரிசையாகக் காணப்படும். இம்மேகம் CC என்ற கூறியீட்டால் குறிக்கப்படும். இவை அதிகபட்ச உயரமான 6 கி.மீ. முதல் 18 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தில் காணப்படுகிறது. இம்மேகம் நான்கு துணை மேகங்களை உடையது. இம் மேகம் கீற்று மற்றும் கீற்றுப்படை மேகம் ஆகிய மேகங்களைச் சுற்றி நிலையற்ற வளிமண்டலம் நிலவும்போது இது தோன்றும். இம்மேகம் சாம்பல் நிறத்துடன் ஒழுங்கான அமைப்புடன் காணப்பட்டால் மழையும் உண்டாகும். இதன்மூலப் பொருட்கள் பனிப்படிகங்களால் ஆனவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்மட்ட_மேகங்கள்&oldid=2748908" இருந்து மீள்விக்கப்பட்டது