உயர்நிலைச் சிந்தனைத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயர்நிலைச் சிந்தனைத்திறன் என்பது சிந்தனைத்திறன்களில் ஒரு வகையாகும். இது ஒரு கல்விக்கான கருத்தியல் ஆகும். இக்கற்றல் வகைப்பாட்டினை, அமெரிக்கக் கல்வி உளவியலாளரான பெஞ்சமிம் ப்ளும் என்பவர் ஆய்ந்தறிந்தார். அடிப்படைச் சிந்தனைத்திறன்களை ஆராய்ந்த அவர், அதன் மேம்பாடாக உயர்நிலைச் சிந்தனைத் திறன்களை 1956 ஆண்டு வடிவமைத்து அறிவித்தார். உயர்நிலைச் சிந்தனைத் திறன் என்பது கூர்சிந்தனைத்திறனை மையப்படுத்துவதாகும்.

உயர்நிலைச் சிந்தனைத்திறனுக்கான கூறுகள்[தொகு]

  1. பகுத்தாய்தல் - வகைப்படுத்துதல், ஆய்தல், ஒப்பிடுதல், முரண்படுதல், அடையாளம் அறிதல்
  2. மதிப்பிடுதல் - தீர்வு, ஊகித்தல், சரியான தீர்வை தேர்ந்தெடுத்தல், தீர்மானித்தல், கருத்தறிதல், துணை அறிதல்
  3. படைத்தல் (உருவாக்குதல்) - புதிதாக உருவாக்குதல், வடிவமைத்தல், கட்டுதல், ஒன்றிணைத்தல், கற்பனை

இந்த உயர்நிலைச் சிந்தனைத்திறனானது கற்றல்-கற்பித்தலில் முக்கிய விளைவை ஏற்படுத்துகிறது. சான்றாக, ஒரு வகுப்பறை என்பது அடிப்டைத்திறன், உயர்சிந்தனைத்திறன் உடைய மாணவர்களால் ஆனது. அவ்விரண்டு வகையான மாணவர்களுக்கெனத் தனித்தனியாக வினாக்கள் உருவாக்குவது என்பது ஆசிரியரின் கடமையாகும். இதனடிப்படையில் உயர்நிலைச்சிந்தனை வினாக்கள், உயர்நிலைச் சிந்தனைத்திறன் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. காரண-காரிய தொடர்பு, கூற்றின் உண்மை அறிதல், சரியான-சரியில்லாதவற்றைத் தேர்ந்தெடுத்தல், ஒப்புமை இல்லாததைக் கண்டறிதல், சூழல் வினாவிடை, பல்தெரிவு வினா, கட்டுரைகள், கடிதங்கள் எனப்பல வகைகள் உயர்நிலைச் சிந்தனைத்திறனுக்கான வகைமையாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]