உபாசனா மகதி
உபாசனா மகதி, இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பார்வையற்றோர் நல ஆர்வலரும், அவர்களுக்காக ஒயிட் பிரிண்ட் என்ற பத்திரிகையை தொடங்கி நடத்தி வரும் பெண் தொழில்முனைவோராவார்.[1] [2] 22016 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையால், இந்தியாவின் 30 வயதுக்குட்பட்ட 30 தொழில்முனைவோர் பட்டியலில் மகதியும் ஒருவராக பெயரிடப்பட்டார். [3]
கல்வி
[தொகு]மகதி, கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு மும்பையில் உள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்.
வெள்ளை அச்சு
[தொகு]2013 ஆம் ஆண்டில், உபாசனா மகதி தனது நண்பர்களுடன் பார்வையற்றோருக்கு இருக்கும் வாசிப்பு முறைகள், இதழ்கள், வாழ்க்கை முறைகளைப் பற்றிய உரையாடலில் தொடங்கிய ஆராய்ச்சி, நீண்டு, மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்புக்குப் பிற்பாடு அவரால், இந்தியாவின் முதல் ஆங்கில வாழ்க்கை முறை இதழான ''வெள்ளை அச்சு (ஒயிட் பிரிண்ட்)'' என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது. இந்த இதழ் மும்பையில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தில் உணவு, கலை, தொழில்நுட்பம், இசை, அரசியல், உத்வேகம் தரும் கதைகள் போன்ற துறைகளில் பரந்த அளவிலான உள்ளடக்கங்களைக் கொண்டு 64 பக்கங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. [4]
வெறும் முப்பது ரூபாய் மட்டுமே விலையாகக் கொண்ட இந்த இதழ், சந்தாதாரர்களின் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே நம்பியிராமல், டாடா குழுமம், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, யாஷ் ராஜ் பிலிம்ஸ், வோடபோன், ஏர்செல் போன்ற பெருநிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று அதன் விளம்பர வருவாய் மூலமே செலவுகள் ஈடுகட்டப்பட்டு நடைபெற்று வருகிறது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lidhoo, Prerna (18 Apr 2018). "Upasana Makati: Making print accessible". www.fortuneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2019-11-21.
- ↑ "Mumbai Diary: Friday Dossier". mid-day (in ஆங்கிலம்). 2019-07-05. Retrieved 2019-11-21.
- ↑ Panchal, Salil (11 Feb 2016). "30 Under 30: Upasana Makati - Helping the visually-challenged see". Forbes India (in ஆங்கிலம்). Retrieved 2019-11-21.
- ↑ Kapoor, Divya (25 Apr 2018). "Meet the woman who is helping blind people see the world". India Today (in ஆங்கிலம்). Retrieved 2019-11-21.
- ↑ thetribalbox.com. "Upasana Makati, Pioneer in Launching a Lifestyle Magazine in Braille for the Visually Impaired". Thetribalbox (in Indian English). Retrieved 2023-03-20.