உந்து (வினைச்சொல் விகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யும் என்னும் வினைமுற்று புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் செய்யுந்து வாய்பாடு பற்றி வருகிறது.
செய்+உம்=செய்யும். செய்+உந்து=செய்யுந்து. உம் என்னும் விகுதி உந்து என மாறியிருப்பதை இங்குக் காணலாம்.
மறு+க்+க்+உம்=மறுக்கும் எனற்பாலது மறு+க்+க்+உந்து=மறுக்குந்து என வந்திருப்பதைப் பாடலில் காணலாம்.
இடைச்சொல் ஈறு பற்றிக் கூறுகையில் உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

சொல்லாட்சித் தொகுப்பு

பரணர்[தொகு]

1 [2][தொகு]

  • 'மீன் நொடுத்து நெல் குவைஇ, மிசை அம்பியின் மனை மறுக்குந்து
  • மனைக் குவைஇய கறி மூடையால், கலிச் சும்மைய கரை கலக்குறுந்து
  • கலம் தந்த பொற் பரிசம் கழித் தோணியான், கரை சேர்க்குந்து

2[3][தொகு]

  • மண்டையான் --- கறக்குந்து
  • அவல் வகுத்த பசுங் குடையான், புதல் முல்லைப் பூப் பறிக்குந்து

கோவூர் கிழார் [4][தொகு]

  • நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து

மாங்குடி கிழார்[தொகு]

1[5][தொகு]

  • கீழ் நீரான் மீன் வழங்குந்து
  • மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து
  • கழி சுற்றிய விளை கழனி, அரிப் பறையான் புள் ஓப்புந்து
  • நெடுநீர் கூஉம் மணல் தண் கான் மென் பறையான் புள் இரியுந்து
  • நனைக் கள்ளின் மனைக் கோசர் தீம் தேறல் நறவு மகிழ்ந்து, தீம் குரவைக் கொளைத் தாங்குந்து

2 [6][தொகு]

நெல் அரியும் இருந் தொழுவர் செஞ் ஞாயிற்று வெயில் முனையின் தெண் கடல் திரை மிசைப் பாயுந்து திண் திமில் வன் பரதவர் வெப்பு உடைய மட்டு உண்டு தண் குரவைச் சீர் தூங்குந்து

கோவூர் கிழார் [7][தொகு]

  • கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் கானல் புன்னைச் சினை நிலைக்குந்து
  • கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து

புறத்திணை நன்னாகனார் [8][தொகு]

  • அம் கண் குறு முயல வெருவ, அயல கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து
  • விழவு இன்றாயினும், உழவர் மண்டை இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து

கருவூர்க் கதப்பிள்ளை [9][தொகு]

  • தென்னவர் வய மறவன் மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து

மகட்பாற்காஞ்சி [10][தொகு]

  • கோவலர் வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து
  • குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து
  • தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தல் பூக் குறூஉந்து

ஒருசிறைப் பெரியனார் [11][தொகு]

  • கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
  • கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், கண் அன்ன மலர் பூக்குந்து


இத்தகைய மொழியியல் மரபு பிற நூல்களில் இல்லை. தற்கால வழக்கிலும் இல்லை

மேற்கோள்[தொகு]

  1. தொல்காப்பியம் - இடையியல் - 44
  2. புறநானூறு 343
  3. புறநானூறு 352
  4. புறநானூறு 400
  5. புறநானூறு 396
  6. புறநானூறு 24
  7. புறநானூறு 386
  8. புறநானூறு 384
  9. புறநானூறு 380
  10. புறநானூறு 339
  11. புறநானூறு 137