உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி:பேச்சுப் பக்கத்தின் துணைத் தலைப்புகளை பரணேற்றுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சுப் பக்கங்கள் நீளும் போது அவற்றைக் காண்பதும் புதிதாக கருத்துகள் இடுவதும் சிரமம் ஆகும். எனவே, அவ்வப்போது உங்கள் பேச்சுப் பக்கங்களைத் தொகுத்துப் பரணில் ஏற்றுவது நன்று. உங்கள் பேச்சுப் பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட துணைத் தலைப்புகள் இருந்தால், பரணேற்றுவதற்கு நல்ல நேரம் என்று பொருள் :)

எப்படித் தொகுப்பது

[தொகு]
  • உங்கள் பேச்சுப் பக்கத்தின் தொடக்கத்தில், கீழ்க்காணும் நிரலைச் சேர்த்து விட்டு முன் தோற்றம் பாருங்கள்:
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
[[உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு|தொகுப்புகள்]]
----
|-
|align="center"|[[/தொகுப்பு 1|1]]
|}
  • பக்கத்தின் மேல் வலப்புறத்தில், சிகப்பு இணைப்பாக உள்ள 1 என்பதைச் சொடுக்கித் தனியாக ஒரு சாளரத்தில் திறந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் பரணேற்ற விரும்பும் பழைய உரையாடல்களைத் தெரிவு செய்து படி எடுங்கள். படி எடுக்க CTRL+C அழுத்துங்கள்.
  • தனியாகத் திறந்து வைத்துள்ள /தொகுப்பு 1 பக்கத்தில் நீங்கள் படியெடுத்து வைத்துள்ள உரையை ஒட்ட, CTRL+V அழுத்துங்கள். பக்கத்தைச் சேமித்த பிறகு நீங்கள் வேண்டிய உரை இங்கு உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • தெரிவு செய்த உரையாடல்களை நீக்கி விட்டுப் பக்கத்தைச் சேமியுங்கள்.