உதவி:பக்கங்களை நீக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிமீடியா திட்டத்தில் உள்ள எந்த ஒரு பக்கத்தினையும் நீக்கும் அனுமதி அனைத்துப் பயனர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கத்தினை நீக்கும் அனுமதியானது, நிர்வாக அணுக்கம் பெற்ற பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏதனும் ஒரு பக்கம் நீக்கப்பட வேண்டும் என பயனர் எண்ணினால், அதற்கான காரணத்தினை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கதில் கருத்தினை இடலாம். அதனை நிர்வாகிகள் கவனித்து, பிற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து, அப்பக்கத்தை நீக்குவர்.

வார்ப்புரு இணைத்தல்[தொகு]

நீக்கப்பட வேண்டிய கட்டுரையை நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு வர {{Delete}} என்ற வார்ப்புருவினை இடலாம். இவ்வார்ப்புரு இணைக்கப்படுவதன் மூலமாக கட்டுரையானது விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் என்ற பகுப்பில் இணைக்கப்படும்.

நீக்குதல் வார்ப்புருவை விரைவாக இணைக்க தொடுப்பிணைப்பி என்ற கருவியை உபயோகம் செய்யலாம்.

இவற்றையும் காண்க[தொகு]

உதவி:பக்கத்தை நகர்த்துதல்