உண் குச்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உண்குச்சிகள்

உண் குச்சிகள் (Chopsticks) என்பவை சீனாவில் பாரம்பரியமாக[1] உணவு உண்ண பயன்படுத்தும் ஒரே நீளமுள்ள இரட்டைக் குச்சிகளாகும். இவற்றைச் சீனா, வியட்னாம், கொரியா, சப்பான் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் எல்லையை ஒட்டிய நேபாளம், திபெத் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். இக்குச்சிகளை மூங்கில், நெகிழி, மரம், அல்லது துருபிடிக்கா இரும்பு, போன்றவற்றில் செய்கின்றனர்.

வரலாறு[தொகு]

சீனாவில் குவைட்சு ( 筷子) எனக் குறிக்கின்றனர். இக்குச்சிகளைப் பயன்படுத்தி உணவை உண்ணும் பழக்கம் கி.மு. 500இல் தொடங்கியது. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான பழக்கம் இது. இறைச்சியை வேகவைக்க சீனர்கள் நெருப்புக் கங்குகளைப் பயன்படுத்தினர். அதாவது ஒரு அகலமான பாத்திரத்தில் மசாலை தடவப்பட்ட இறைச்சித் துண்டுகளை வைத்துச் சுற்றிலும் நெருப்புக் கங்குகளை வைத்துவிடுவார்கள். இறைச்சித் துண்டுகளை வெறுங்கையால் எடுத்தால் சுடுமென்பதால் இரு குச்சிகளை இடுக்கி போல் பயன்படுத்தி அவற்றை எடுத்துப் பரிமாறும் பாத்திரத்தில் வைத்துக் கொண்டனர். இறைச்சி நன்றாக வெந்துள்ளதா என்று பார்க்க, அதைச் சமைப்பவர்கள் குச்சியில் பிடித்தபடியே கொஞ்சம் சுவைத்தனர் இந்தப் பழக்கமே பிறகு சிறிய அளவிலான குவைட்சு குச்சிகளாக மாறி, சாப்பாட்டு மேசைக்கு வந்தது என்கின்றனர்.

பண்பாட்டுக் காரணம்[தொகு]

பொருளுள்ள நல்ல வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சீனர்களுக்குச் சொல்லித்தந்தவர் கி.மு 500 இல் வாழ்ந்த மாமேதையான கன்பூசியஸ். அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள். உணவு மேசையில் கத்தியைக் கொண்டு இறைச்சியை வெட்டிச் சாப்பிடும் பழைய முறையைக் கைவிட்டார்கள். அவரே குச்சிகளைக் கொண்டு உணவு உண்ண சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கின்றனர். சீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது. குவை (快) என்றால் 'விரைவான' என்று பொருள். 'சு' (竹) என்றால் மூங்கில்[2] அல்லது மகன் என்பது பொருள். (விரைவான மகன்) புதிதாகத் திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளைக் கொடுத்தனுப்புவது வழக்கமாம்.[3],

குறிப்புகள்[தொகு]

  1. Needham (1986), volume 6 part 5 105–108
  2. Wilkinson, Endymion (2000). Chinese history: A manual. Cambridge: Harvard University. பக். 647. ISBN 978-0-674-00249-4. http://books.google.com/books?id=ERnrQq0bsPYC. 
  3. தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 15 அக்டோபர் 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்_குச்சிகள்&oldid=2228908" இருந்து மீள்விக்கப்பட்டது