உடல இனப்பெருக்கம்



உடல இனப்பெருக்கம் (Vegetative reproduction) என்பது தாவரங்களில் நிகழும் கலவியில்லாத ஒரு பாலின இனப்பெருக்க வடிவமாகும். விதையிலா இனப்பெருக்கம், தாவரப் பரவல், படியாக்கம் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு புதிய தாவரம் தாய் தாவரத்தின் ஒரு துண்டு அல்லது வெட்டிலிருந்து அல்லது சிறப்பு இனப்பெருக்க அமைப்புகளிலிருந்து வளர்கிறது. இதனால் இந்த இனப்பெருக்க முறை சில நேரங்களில் தாவர இனப்பெருக்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.[1][2][3]
பல தாவரங்கள் இயற்கையாகவே இந்த வழியில் இனப்பெருக்கம் செய்கின்றன, ஆனால் அதை செயற்கையாகவும் தூண்டலாம். தோட்டக்கலை வல்லுநர்கள் தாவர இனப்பெருக்கக் குழாய்களைப் பயன்படுத்தி பாலினமற்ற இனப்பெருக்க நுட்பங்களை உருவாக்கியுள்ளனர். வெற்றி விகிதங்களும் இனப்பெருக்கத்தின் சிரமமும் பெரிதும் வேறுபடுகின்றன. ஒரு விதையிலைச் செடிகளில் பொதுவாக சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு என்ற வளர்திசு இல்லாததால், இவை இனப்பெருக்கம் செய்வது மிகவும் சவாலானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "vegetative reproduction | horticulture". Encyclopedia Britannica.
- ↑ Kershaw, K. A.; Millbank, J. W. (April 1970). "Isidia as Vegetative Propagules in Peltigera Aphthosa VAR. Variolosa (Massal.) Thoms" (in en). The Lichenologist 4 (3): 214–217. doi:10.1017/S0024282970000257. பன்னாட்டுத் தர தொடர் எண்:1096-1135. https://www.cambridge.org/core/journals/lichenologist/article/abs/isidia-as-vegetative-propagules-in-peltigera-aphthosa-var-variolosa-massal-thoms/E834E80B4B671152D6BF6DB298B06BDA. பார்த்த நாள்: 4 January 2022.
- ↑ RRB, Leakey (31 December 2004). "Physiology of vegetative reproduction". Encyclopedia of Forest Sciences. doi:10.1016/B0-12-145160-7/00108-3. https://www.researchgate.net/publication/279420559. பார்த்த நாள்: 4 January 2022.