இணைய நெறிமுறைப் பதிப்பு 6
இ.நெறி ப6 ( இணைய நெறிமுறை பதிப்பு 6 என்பதின் சுருக்கம்) (IPv6) என்பது ஒரு இணைய நெறிமுறையாகும் . இன்றும் பயனோங்கி நிற்கும் முதல் செயல்படுத்தமான இ.நெறி ப4 ஐ முறியடிக்கவே இது கட்டமைக்கப்பட்டது . இது பொட்டணம்-மாற்று பிணையத்தின் ஓர் இணைய அடுக்கு நெறிமுறையாகும் . இ.நெறி ப4 ஐ முதலில் மறுகட்டமைப்பிற்கு திசைத் திருப்பியதன் காரணம் அதன் முகவரிப் பகிர்வின்மையே ஆகும். டிசம்பர் 1998 இல், இணையக் குறிப்பீட்டுத் தர நிர்ணயம் RFC 2460 என்பதுடன் இ.நெறி ப6 பற்றி இணையப் பொறியியல் பணிச் செயற்படையால் விவரிக்கப்பட்டது .
இ.நெறி ப6, இ.நெறி ப4 ஐ விட பரந்த பெரும் முகவரித் தளங்களை கொண்டதாகும் . வெறும் 32-துகள் (பிட்) முகவரியை இ.நெறி ப4 கொண்ட நிலையில் இ.நெறி ப6 , 128-துகள் (பிட்) முகவரியை கொண்டதாக இருப்பதினாலேயே இவை நேர்ந்தது . இதனால் இந்த புதிய முகவரித் தளம் 2128 (ஏறத்தாள 3.4×1038) முகவரிகளைக் கொண்டிருக்கிறது .