இஸ்தான்புல் இரவுவிடுதி துப்பாக்கிச் சூடு, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்தான்புல் இரவுவிடுதி துப்பாக்கிச் சூடு, 2017 is located in Istanbul
இஸ்தான்புல் இரவுவிடுதி துப்பாக்கிச் சூடு, 2017
துப்பாக்கிச் சூடு நடந்த இடம்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இரவு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் மீது 2017, ஜனவரி 1 அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 39 மக்கள் கொல்லப்பட்டனர் மேலும் சுமார் 70 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக அப்துல்காதிர் மாஷிர்போவ் (Abdulkadir Masharipov) என்பவர் ஜனவரி 17 அன்று கைது செய்யப்பட்டார்.

தாக்குதல்[தொகு]

இரவுவிடுதியில் அதிகாலை 01:15 மணியளவில் ஏகே 47 வகை துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தாக்குதலில் ஈடுபடும்போது அரபி மொழியில் பேசிக்கொண்டே தாக்குதல் நடத்தினார் மேலும் 'அல்லாஹூ அக்பர்' எனும் கோசத்தையும் எழுப்பினார். மொத்தம் ஏழு நிமிடம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 180 சுற்றுகளாக நடத்தப்பட்டது. தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதி சமயலறைக்குள் புகுந்து உடைகளை மாற்றிவிட்டு பொதுமக்களோடு கலந்து தப்பிச் சென்றார்.[1][2][3]

பாதிக்கப்பட்டவர்கள்[தொகு]

இத்தாக்குதலில் பதினான்கு நாட்டைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் இருவர் இந்தியாவைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]