இளவரசர் வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் வைரம்
எடை34.65 காரட்டுகள் (6.930 g)
நிறம்அடர் இளஞ்சிவப்பு நிறம்
மூல நாடுஇந்தியா
எடுக்கப்பட்ட சுரங்கம்கோல்கொண்டா சுரங்கம்
கணப்பிடப்பட்ட பெறுமதி$40 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

இளவரசர் வைரம் (Princie Diamond) என்பது கோல்கொண்டா சுரங்கங்களில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட தோராயமாக 34.65 காரட் எடை கொண்ட ஆடம்பரமான அடர் இளஞ்சிவப்பு நிற வைரமாகும்.[1] தாரியா-இ-நூர் (சுமார். 175 முதல் 195 காரட்), நூர்-ஓல்-ஐன் (சுமார். 60 காரட்) க்குப் பிறகு, இளவரச வைரமானது உலகின் நான்காவது பெரிய இளஞ்சிவப்பு வைரமாக நம்பப்படுகிறது என்று கிறிஸ்டி ஏல நிறுவனம் கூறுகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

அமெரிக்காவின் இரத்தினவியல் நிறுவனம், இந்த வைரத்தை ஆடம்பரமான அடர் இளஞ்சிவப்பு, இயற்கை நிறம், விஎஸ்2 தெளிவு, வகை IIa என வகைப்படுத்துகிறது.[2] மேலும், புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது பிரகாசமான ஆரஞ்சு-சிவப்பு ஒளிரும் தன்மையைக் காட்டும் பண்பும் இதற்கு உண்டு எனவும், புற ஊதா ஒளிக்கு இந்த வகையான எதிர்வினை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைரங்களுக்கு பொதுவானது எனவும் அந்நிறுவனம் கூறுகிறது. இந்த ஆய்வகத்தின் மூலம் சென்ற 7 மில்லியனுக்கும் அதிகமான வைரங்களில், 40 க்கும் மேற்பட்ட வைரங்கள் இந்த நிகழ்வை வெளிப்படுத்தவில்லை. மேலும் இளவரச அந்தப் பண்பை வைத்திருக்கும் மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரமாகும்.[3][4]

வரலாறு[தொகு]

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோல்கொண்டா சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது இளவரசன் ("பிரின்சி") அல்லது வேறு பெயரால் அறியப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இது ஐதராபாத்து இராச்சிய அரச குடும்பத்தைச் சேர்ந்தது (ஐதராபாத் நிசாம்கள்). அப்போதைய ஐதராபாத்து நிசாம் 1960 ஆம் ஆண்டு சோதேபியில் ஏலம் எடுத்தார். இது 46,000 பிரித்தானிய பவுண்டுகளுக்கு வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ் என்ற நகைக்கடையின் இலண்டன் கிளையால் வாங்கப்பட்டது. பின்னர் அது அவர்களின் பாரிஸ் கடைக்கு அனுப்பப்பட்டது, அங்கு பரோடாவின் மகாராணியான சீதா தேவியின் பதினான்கு வயது மகனான சாயாஜிராவ் கெய்க்வாட் (1945-1985) என்பவரின் நினைவாக பியர் ஆர்பெல்ஸால் "பிரின்சி" என்று பெயரிடப்பட்டது.

இது 16 ஏப்ரல் 2013 அன்று நியூயார்க்கில் கிறிஸ்டி நிறுவனத்தால் ஒரு சாதனை விலைக்கு ஏலம் விடப்பட்டது.[5] 45 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.[6] நிகழ்வில் இது 39.3 மில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்டியது. இது இன்னும் சாதனை விலையில் உள்ளது. இது இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட கோல்கொண்டா சுரங்க வைரம் மற்றும் கிறிஸ்டியில் விற்கப்பட்ட நகைகளுக்கு அதிக விலை என்ற சாதனையை படைத்தது. இது முந்தைய உள்ளூர் சாதனையான 24.4 மில்லியன் டாலர்களை முறியடித்தது.[7] இது ஒரு அநாமதேய சேகரிப்பாளரால் தொலைபேசி மூலம் ஏலம் எடுக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "Art Gallery | Online Auction Viewing of furniture, jewelry, watches, musical instruments and fine art | MAGNIFICENT JEWELS AND THE PRINCIE DIAMOND". Christies.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
  2. "Art Gallery | Online Auction Viewing of furniture, jewelry, watches, musical instruments and fine art | MAGNIFICENT JEWELS AND THE PRINCIE DIAMOND". Christies.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
  3. "THE PRINCIE DIAMOND | Jewelry Auction | unmounted, diamond | Christie's". Christies.com. 2013-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
  4. Among those diamonds that have gone through the G.I.A.'s lab
  5. "THE PRINCIE DIAMOND | Jewelry Auction | unmounted, diamond | Christie's". Christies.com. 2013-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05."THE PRINCIE DIAMOND | Jewelry Auction | unmounted, diamond | Christie's". Christies.com. 2013-04-16. Retrieved 2013-09-05.
  6. "BBC News – Princie Diamond: Rare Indian gem sells for $39m". Bbc.co.uk. 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
  7. "34-Carat Princie Diamond Fetches Nearly $40 Million, Setting Two Records". Forbes. 2013-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசர்_வைரம்&oldid=3924671" இலிருந்து மீள்விக்கப்பட்டது