இளம் கிறித்தவ தொழிலாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளம் கிறித்தவ தொழிலாளர்கள் (இகிதொ) Young Christian Workers YCW; பிரெஞ்சு மொழி: Jeunesse ouvrière chrétienne) என்பது இளம் தொழிலாளர்களால் நடத்தப்படும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இளம் கிறித்தவ தொழிலாளர்கள் இயக்கம் பெல்ஜியத்தை சேர்ந்த குருவானவர் சோசப் கார்டைன் 1924 தெடங்கினார்.

வரலாறு[தொகு]

ஆரம்பத்தில் மூன்று இளம் தொழிலாளர்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரெஞ்சு மற்றும் எசுப்பானிய மொழியில் சுருக்கமாக JOC என்று பரவலாக அறியப்படும். 1925 ஆம் ஆண்டில் திருத்தந்தை பியச் XI இகிதொவுக்கு அனுமதியளித்தார். அதன் பிறகு 1926 பிரான்சிலும் மேலும் 48 நாடுகளுக்கும் பரவியது.

கடந்த காலத்தில் இகிதொ[தொகு]

1939 இல் கியூபெக் கனடா நாட்டில் இகிதொ

கார்டைனின் தந்தை ஒரு சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஆவார் அதனால் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நேரில் பார்த்துள்ளார் அதுவே இவருக்கு இயக்கத்தை ஆரம்பிக்க துண்டுகொலாக அமைந்தது.

1938 ஆம் ஆண்டில் 75,000 உறுப்பினர்களுடன் ஒரு பாரிசில் பேரணி நடந்தது அதில் கார்டைன் உரையாற்றினார் அந்த நிகழ்வை டைம் இதழ் பதிவு செய்தது. [1]

கார்டைன் தனது வாழ்நாள் முழுவதையும் இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். 1957 ஆம் ஆண்டில் இகிதொ தனது முதல் சர்வதேச சபையை (International Council) உரோமில் நடத்தியது. கார்டைன் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தில் ஆலோசகராக பணியாற்றினார் மற்றும் 1965 இல் ஒரு கார்டினலாக நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் இகிதொவின் முதல் குழு பிப்ரவரி 1937 ஆண்டு லங்காச்யரின் உள்ள தேவாலயத்தில் பணி. ஜெரார்ட் ரிம்மரால் அரம்பிக்கப்பட்டது. [2] 1945 ஆம் ஆண்டு பாட் கீகன் சர்வதேச இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தின் முதல் தலைவராக பதவியேற்றார். 1957 வரை அவர் வகித்த பதவி. பின்னர் அவர் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தின் சாவதேச பேரவையில் இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். [3]

இன்றைய இகிதொ[தொகு]

ஐரோப்பா, ஆசியா, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.

சர்வதேச இகிதொ (IYCW) என்பது 51 க்கும் மேற்பட்ட நாடுகளில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசு சாரா சர்வதேச இயக்கமாக செயல்பட்டு வருகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]