இளங்கலை மீன்வள அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கலை மீன்வள அறிவியல் (Bachelor of Fisheries Science BFSc ) என்பது இந்தியாவில் மீன்வள அறிவியல் படிப்பிற்கான இளங்கலைப் பட்டம் ஆகும். [1] "மீன்வள அறிவியல்" என்பது மீன்வளத்தை நிர்வகித்தல் மற்றும் புரிந்துகொள்வதற்கான கல்வித் துறையாகும். இனப்பெருக்கம், மரபியல், உயிரி தொழில்நுட்பம், ஊட்டச்சத்து, விவசாயம், மீன்களின் நோய்களைக் கண்டறிதல், பிற நீர்வாழ் வளங்கள், நீர்வாழ் விலங்குகளின் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட மீன்வளர்ப்புத் துறைகளில் இது ஒரு பல்துறை அறிவியல் ஆகும்.

மீன்களின் நோய்களைக் குணப்படுத்துதல், பதப்படுத்துதல், உறைதல், மதிப்புக் கூட்டல், துணைப் பொருட்கள் மற்றும் கழிவுப் பயன்பாடு, தர உத்தரவாதம் மற்றும் சான்றிதழ், மீன்வள நுண்ணுயிரியல், மீன்வள உயிர் வேதியியல் உள்ளிட்ட மீன் செயலாக்கம்; உயிரியல், உடற்கூறியல், வகைபிரித்தல், உடலியல், மக்கள்தொகை இயக்கவியல் உள்ளிட்ட மீன்வள வள மேலாண்மை; கடல்சார்வியல், ந்ன்னீரியல், சூழலியல், பல்லுயிர், நீர் மாசுபாடு உள்ளிட்ட மீன்வள சூழல்; மீன்பிடி முட்டுகள் மற்றும் மரக்கலப் பொறியியல், கடற்பயணவியல் மற்றும் கடல் ஆளும்திறன், கடல் இயந்திரங்கள் உள்ளிட்ட மீன்பிடி தொழில்நுட்பம்; மீன்வள பொருளாதாரம் மற்றும் மேலாண்மை மற்றும் மீன்வள விரிவாக்கம் ஆகியவற்றை உள்ளாடக்கிய பல்துறை அறிவியல் ஆகும்.

மீன்வள அறிவியல் என்பது பொதுவாக ஒரு பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கப்படும் 4 ஆண்டு பிரிவாகும், மேலும் இது இளங்கலை, முதுகலை அல்லது முனைவர் ஆகிய திட்டங்களில் கல்வி கற்ற இயலும். இளங்கலை நிலை மீன்வளப் படிப்புகள் (BFSc) மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களால், மீன்வள அறிவியல் துறையில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்பத் திறன் வாய்ந்த பணியாளர்களைக் கிடைக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்டன.

வரலாறு[தொகு]

1961 ஆம் ஆண்டு சேவைப் பயிற்சிக்காக மும்பையில் மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது.பின்னர் 1969 ஆம் ஆண்டு மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் (SAU) அமைப்பின் கீழ் மங்களூரில் முதல் மீன்வளக் கல்லூரியை நிறுவியதன் மூலம் இந்தியாவில் மீன்வளக் கல்வி பன்மடங்கு வளர்ந்தது. கடந்த நான்கு தசாப்தங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் ஆகிய வகைகளில் கல்வி கற்கும் வண்ணம் இந்தப் படிப்பு வளர்ச்சி பெற்றது.தற்போது, 25 மீன்வளக் கல்லூரிகள், இளங்கலை மீன்வள அறிவியலில் நான்காண்டு பட்டப்படிப்பை வழங்குகின்றன, அவற்றில் 10 பல்வேறு துறைகளில் முதுகலை மீன்வள அறிவியல் ( MFSc ) மற்றும் 6 முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. இளங்கலை பாடத்திட்டங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தால் அவ்வப்போது திருத்தப்பட்டன. அனைத்து மீன்வளக் கல்லூரிகளும் இவற்றைத் தழுவி, கல்லூரிகளுக்கு இடையே சமமான தரநிலையைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தகுதி[தொகு]

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு பெரும்பாலானவற்றிற்கு பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடப் பிரிவுகளை பயின்றிருக்க வேண்டும் என்பதே தகுதியாகும். மாநில அளவிலான நுழைவுத் தேர்வு மூலமாகவோ அல்லது அகில இந்திய அளவிலான ஐசிஏஆர் ( இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ) தேர்வு மூலமாகவோ தேர்வு செய்யப்படும். இளங்கலை முடித்த பிறகு முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பயிலலாம்.

சான்றுகள்[தொகு]

  1. "Reference at employmentnews.gov.in" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலை_மீன்வள_அறிவியல்&oldid=3727370" இலிருந்து மீள்விக்கப்பட்டது