இல்ம்
Jump to navigation
Jump to search
இல்ம் என்பது அரபு மொழியில் அல்லது இசுலாமிய சமயத்தில் அறிவைக் குறிக்கப் பயன்படும் சொல். இச் சொல் எல்லா அறிவையும் குறிக்கிறது எனினும், 14 ம் நூற்றாண்டில் இல்ம் என்றால் சமய அறிவு என்ற கருத்தாக்கத்தை உலாமா கொண்டு வந்தார்கள்.[1]
இசுலாமிய சமயத்தில் இல்ம் பெறுவது ஊக்குவிக்கப்படுகிறது. இசுலாமிய பொற்காலத்தின் ஆக்க சக்தியாக இந்த உந்தல் அமைந்தது. இசுலாமிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்கும், இல்ம் சமய அறிவு மட்டும் என்று கருத்தாக்கம் செய்யப்பட்டது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ziauddin Sardar & Zafar Abbas Malik. (2001). Introduction to Silam. London: Icon Books Ltd.