இலில்லியன் மார்ட்டின் இலீக்
இலில்லியன் மார்ட்டின் இலீக் | |
---|---|
பிறப்பு | பாடிங்குட்டன், இலண்டன், இங்கிலாந்து | 17 மார்ச்சு 1867
இறப்பு | 1962 (aged 95) பிடேபோர்டு, தெவோன், இங்கிலாந்து |
பணி | அறிவியல் ஆசிரியர், வானியலாளர், அறிவியல் படவரைவாளர் |
இலில்லியன் மார்ட்டின் இலீக் (Lilian Martin-Leake) (17 மார்ச்சு 1867, பாடிங்குட்டன், இங்கிலாந்து – 1962, பிடேபோர்டு, இங்கிலாந்து) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அறிவியல் ஆசிரியரும் அறிவியல் படவரைவாள்ரும் ஆவார். இவர் பிரித்தானிய வானியல் கழக உறுப்பினரும் ஆவார்.[1]இவர் இக்கழகம் ஏற்பாடு செய்த 1900 மே 28 ஆம் நாளைய முழுச் சூரிய ஒளிமறைப்பு நிகழ்வில் பங்கேற்க இணைந்தார். இவர் அல்ஜியர்சு நகர இரேகன்சு விடுதிக் கூரையில் உள்ள வான்காணகத்தில் தன்னோடு இணைந்த நால்வருடன் சூரிய ஒள்முகட்டுக் கட்டமைப்பை75 மிமீ பொருள்வில்லை விட்டத் தொலைநோக்கியால் ஆய்வு செய்ய தங்கினார்.[2] இவர் அலைசு எவரெட் முன்மொழிவாலும் ஆன்னீ மவுந்தர், இரசல் ஆகியோரின் வழிமொழிவாலும் 1893 மே 31 ஆம் நாள் பிரித்தானிய் வானியல் கழகத்தில் சேர்ந்துள்ளார்.[3]
இவர் அல்ஜியர்சில் 1900 மே 28 ஆம் நாளன்று நிகழ்ந்த ஒளிமறைப்பின் சூரிய வண்ணக்கோளத்தையும் கிடப்பியல் ஒளிப்புடைப்புகளையும் தொலைக்காட்சி ஒளிப்படத்தைக் கொண்டு வரைந்துள்ளார்.[4][5] இவர்து வண்ணக்கோள,, சூரிய ஒளிமுகட்டுப்படம் வண்ணக்கோளத்தில் செந்நிறப் புடைப்புகளைக் காட்டியது. இவை முன்னர் மலைகளாக கருதப்பட்டன.[6]
வாழ்க்கை
[தொகு]இவர் 1867 மார்ச்சு 17 ஆம் நாளன்று பிறந்தார்.[7]இவரது தந்தையார் குடிமைப் பொறியாளரும் கொட்டை வடிநீர்(காப்பி) ஆலையளரும்மன வில்லியம் மர்ட்டின் இலீக் ஆவார்; தாயார் உலூயிசா ஆரியத் மார்ட்டின் இலீக் ஆவார். ஐந்து அக்கா தங்கையரும் இரண்டு அண்ணன் தம்பியருமாக ஏழு உடன்பிறப்புகள் உண்டு. இவர் தன் பள்ளிக் கல்வியை கேம்பிரிட்ஜில் உள்ள கிர்ட்டன் கல்லூரியில் 1886 இல் முடித்தார்; அக்கல்லூரியிலேயே தன் பட்டப்படிப்பை 1890 இல் முடித்துள்ளார்.[சான்று தேவை] இவருக்குப் பிரித்தானிய வானியல் கழகத்துக்குப் பரிந்துரைத்த இரசலும் அலைசு எவரெட்டும் ஓராண்டுக்கு முன்பு இதே கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்துள்ளனர்.
இவர் 1896 முதல் 1900 வரை வின்செசுட்டர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக இருந்துள்ளார். இவர் 1914 இலிருந்து 1915 வரையிலும் மீண்டும் 1919 இலிருந்து 1928 வரையிலும் கல்வி வாரிய ஆய்வாளராக இரண்டு தடவை பணிபுரிந்துள்ளர்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Notices of the Association". Journal of the British Astronomical Association 11: 47–48. November 1900. Bibcode: 1900JBAA...11...47.. http://adsabs.harvard.edu/full/1900JBAA...11...47..
- ↑ British Astronomical Association; Maunder, E. Walter (Edward Walter) (1901). The total solar eclipse, 1900; report of the expeditions organized by the British astronomical association to observe the total solar eclipse of 1900, May 28. University of California Libraries. London, "Knowledge" office.
- ↑ "1893JBAA....3..286. Page 286". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.
- ↑ "Solar Eclipse Newsletter, Volume 8, Issue 1" (PDF). NASA. January 2003. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
- ↑ Knowledge. v. 1-40; Nov. 1881-Dec. 1917. Vol. 23. London: Wyman [etc.]
- ↑ Littmann, Mark; Espenak, Fred (2017-04-14). Totality — The Great American Eclipses of 2017 and 2024 (in ஆங்கிலம்). Oxford University Press. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-251489-9.
- ↑ "England Births and Christenings, 1538-1975". பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
- ↑ Teachers Registration Council - Registers 1914-1948, register number 1301