இலியோனித் இலேனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியோனித் இலேனின்
பிறப்பு10 ஆகத்து 1981 (அகவை 41)
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்
 • Keldysh Institute of Applied Mathematics
இணையத்தளம்http://spaceobs.org/ru

இலியோனித் விளாதிமிரோவிச் இலேனின் (Leonid Vladimirovich Elenin, உருசியம்: Леони́д Влади́мирович Еле́нин; பிறப்பு: 10 ஆகத்து 1981) உருசிய பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் குறுங்கோள் காணும் வான்காணகமான மேகில் மலையில் அமைந்த SON-NM வான்காணகத்தில் நோக்கீட்டு விதிமுறைகள் #H00-H99|H15 ஆகியவற்றைப் பின்பற்றிப் பன்னாட்டு அறிவியல்சார் ஒளியியல் வலையமைப்பு வாயிலாக இணைந்து பணிபுரிந்தார். இது உருசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த முதல் தொலைவிட நோக்கீட்டு வான்காணகம் ஆகும்.

இவர் கெடிழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனத்துக்காகப் பணிபுரிகிறார்.[1] இவர் உருசியாவில் இலியூபெர்த்சி எனும் மாஸ்கோ பகுதியில் வாழ்கிறார்.[2]

இவர் 2010 திசம்பர் 10 இல் சி/2010 எக்சு1 என்ற வால்வெள்ளியைக் கண்டுபிடித்துப் புகழ்பெற்றார்.[2] பின்னர், இவர் 2011 சூலை 7 இல் பி/2011 NO1 எனும் வால்வெள்ளியையும் கண்டுபிடித்தார்.[3]

இவர் 2008 திசம்பர் 1 இல் முதன்முதலாக 2008 XE எனும் குறுங்கோளை திசெக் (Tzec) #H00-H99|H10 எனும் நோக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றிக் கண்டுபிடித்தார்.[4] இவர் முதல் அமோர் குறுங்கோளாகிய (புவியண்மைக் குறுங்கோள்) 2010 RN80 ஐ 2010 செப்டம்பர் 10 இல் ISON-NM (H15) நோக்கீட்டு விதிமுறைகளின்படிக் கண்டுபிடித்தார்.[5]

இவர் 2011 ஆகத்து 23 இல் வியாழனைப் பின்பற்றும் L5 வியாழன் திரொழான் ஆகிய 2011 QJ9ஐக் கண்டுபிடித்தார்.[6] மேலும் இவர் செவ்வாயைக் கடக்கும் குறுங்கோளாகிய2011 QD23ஐ 2011 ஆகத்து 25 இல் கண்டுபிடித்தார்.[7] அதேபோல புவியண்மை வான்பொருளான குறுங்கோள் 2011 QY37 ஐ 2011 ஆகத்து 27 இல் கண்டுபிடித்தார்.[8] இவர் கண்டுபிடித்த எண்ணிட்ட முதல் ISON-NM குறுங்கோள் 365756 ISON (2010 WZ71) ஆகும்.[9]

இவருக்கு 2013 ஜனவரி 29 இல் சிறுகோள் மையம் பயில்நிலை வானியலாருக்கு வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான எட்கார் வில்சன் விருதை வழங்கியது.[10]

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 15 [11]
216439 இலியூபெர்த்சி 15 மார்ச்சு 2009 216439
(239664) 2008 XE{{{2}}} 1 திசம்பர் 2008 239664
257261 அவச்கின் 31 மார்ச்சு 2009 257261
269390இகோர்த்காசெங்கோ 27ஆகத்து 2009 269390
(296345) 2009 FR4 19 மார்ச்சு 2009 296345
(296563) 2009 QS35 29 ஆகத்து 2009 296563
(301522) 2009 FX23 22 மார்ச்சு 2009 301522
365756 இசோன் 4 நவம்பர் 2010 365756
(369485) 2010 UP6 16 அக்தோபர் 2010 369485
(372562) 2009 UN20 25 அக்தோபர் 2009 372562
382238 இயூபெமசு 8 ஜூலை 2011 382238
(400697) 2009 RV4 15 செப்டம்பர் 2009 400697
(425381) 2010 CB44 13 பிப்ரவரி 2010 425381
(429070) 2009 HR67 27 ஏப்பிரல் 2009 429070
(471002) 2009 SN170 27 செப்டம்பர் 2009 471002
2016 இல் சிறுகோள் மையம் அறிவிப்பின்படி

மேற்கோள்கள்[தொகு]

 1. "Астрономы обнаружили в спектре "российской" кометы Еленина следы синильной кислоты". 7 August 2011. September 8, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "IAUC 9189: C/2010 X1; P/2010 V1". IAU Central Bureau for Astronomical Telegrams. 2010-12-17. 2011-03-15 அன்று பார்க்கப்பட்டது.
 3. "MPEC 2011-O09 : 2011 NO1". IAU Minor Planet Center. 2011-07-18. 2011-07-19 அன்று பார்க்கப்பட்டது.
 4. "JPL Small-Body Database Browser: 239664 (2008 XE)" (2010-04-09 last obs). 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 5. Elenin, Leonid (2010-09-13). "The first near-Earth asteroid of ISON-NM observatory". 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது.
 6. Elenin, Leonid (2011-08-31). "The first Jovian trojan has been discovered at the ISON-NM observatory". 2011-09-05 அன்று பார்க்கப்பட்டது.
 7. "MPEC 2011-Q39 : 2011 QD23". IAU Minor Planet Center. 2011-08-27. 2011-09-05 அன்று பார்க்கப்பட்டது.
 8. "MPEC 2011-Q51 : 2011 QY37". IAU Minor Planet Center. 2011-08-29. 2011-09-05 அன்று பார்க்கப்பட்டது.
 9. "JPL Small-Body Database Browser: 365756 (2010 WZ71)" (2013-06-04 last obs). 2013-08-24 அன்று பார்க்கப்பட்டது.
 10. "2012 Comet Awards Announced". January 29, 2013. 2013-01-31 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 August 2016. 25 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியோனித்_இலேனின்&oldid=2734522" இருந்து மீள்விக்கப்பட்டது