உள்ளடக்கத்துக்குச் செல்

இலிண்டா சுபில்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிண்டா சுபில்கர்
Linda Spilker
பிறப்புLinda Joyce Bies[1]
1955 (அகவை 61-62)
வாழிடம்அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைகோள் அறிவியல்
பணியிடங்கள்தாரைச் செலுத்த ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம், புல்லர்ட்டன் (இளங்கலை),
கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு (மூதறிவியல்),
கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு (முனைவர்)
ஆய்வேடுகோள் வலயங்களின் அலைக் கட்டமைப்பு (1992)
ஆய்வு நெறியாளர்கிறித்தோபர் டி. இரசல்
விருதுகள்நாசா விதிவிலக்கான பணிப் பதக்கம் (2013)
நாசா குழு சாதனை விருதுகள் (2011, 2009, 2000, 1998, 1982-1989)
* நாசா அறிவியல் சாதனை விருது (1982)

இலிண்டா சுபில்கர் (Linda Spilker) ஓர் அமெரிக்க வானியலாளரும் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளரும் ஆவார்.[2][3][4][5][6] இவரது ஆய்வு காரிக்கோள் வலயங்களின் தோற்றமும் படிமலர்ச்சியும் இயக்கவியலும் ஆகும்.[7]

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் புல்லர்ட்டனில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்ட்த்தை 1977 இல் பெற்றார். இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் 2983 இல் அறிவியல் முதுவர் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் 1992 இல் புவி இயற்பியலிலும் விண்வெளி இயற்பியலிலும் பெற்றார்.ரிவர் 1977 இல் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் முதலில் அதே ஆண்டில் ஏவப்பட்ட வாயேஜர் இலக்குத் திட்டத்தில் பணிசெய்தார்.[8] இவர் 1990 இல் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளர் ஆனார்.[2] ஐவர் 1997 இல் இத்திட்டச் சாதனைகளினை சுருக்கமாக விவரிக்கும் நாசாவின் வெளியீட்டின் பதிப்பாசிரியராக இருந்தார்.[9] இவர் 2010 முதல் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளராக முழு குழுவினரின் அறிவியல்ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகிறார்.[3][4][5][6][8]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • நாசா விதிவிலக்கான பணிப் பதக்கம் (2013)[2][10]
  • நாசா குழு சாதனை விருதுகள் (2011, 2009, 2000, 1998, 1982-1989)[2]
  • நாசா அறிவியல் சாதனை விருது (1982)[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Linda Spilker". IMDb.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Linda Spilker". science.jpl.nasa.gov.
  3. 3.0 3.1 "NASA's Cassini Begins Its Final Mission Before Self-Destruction". NPR.org. 2017-04-05. https://www.npr.org/2017/04/05/522756844/nasas-cassini-begins-its-final-mission-before-self-destruction. 
  4. 4.0 4.1 "NASA's Cassini Mission Conducts Daring Dive through Saturn's Rings" (in en). Scientific American. 2017-04-26. https://www.scientificamerican.com/article/nasas-cassini-mission-conducts-daring-dive-through-saturns-rings/. 
  5. 5.0 5.1 "Saturn ruled this scientist's life for 40 years — here's why she needs NASA to go back after Cassini's death" (in en). Business Insider. 2017-09-17. http://www.businessinsider.com/voyager-mom-linda-spilker-why-nasa-should-go-back-saturn-2017-9. 
  6. 6.0 6.1 Kaplan, Sarah (2017-09-14). "Cassini was the mission of a lifetime for this NASA scientist. Now she must say goodbye.". Washington Post. https://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2017/09/14/for-this-nasa-scientist-cassini-was-the-mission-of-a-lifetime-now-she-must-say-goodbye/. 
  7. Meltzer, Michael (2015). The Cassini-Huygens Visit to Saturn: An Historic Mission to the Ringed Planet. Springer. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3319076078.
  8. 8.0 8.1 "Linda Spilker, planetary scientist". scicom.ucsc.edu (in ஆங்கிலம்).
  9. Spilker, Linda, ed. (1997). Passage to a ringed world : the Cassini-Huygens mission to Saturn and Titan (PDF). National Aeronautics and Space Administration SP-533.
  10. "NASA Agency Honor Awards" (PDF). 2013. p. 25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிண்டா_சுபில்கர்&oldid=3949785" இலிருந்து மீள்விக்கப்பட்டது