இலவுரா கெர்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலவுரா கெர்பர் (Laura Kerber) நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரியும் அமெரிக்க ஆராய்ச்சி அறிவியலாளர் ஆவார். இவர் கோள் நிலவியலில் ஆய்வு செய்கிறார்[1]. இவர் எரிமலை வெடிப்பு நிகழ்வையும் பாலைநிலக் காற்று அரிப்புத் தேய்மானத்தையும் புவிக்கப்பாலைய முழைகளையும் (குகைகளையும்) ஆய்வு செய்கிறார். இவரது ஆய்வு அறிவன் கோள், செவ்வாய், நிலா ஆகிவற்றின் ஆய்வில் முதன்மைக் கவனம் செலுத்துகிறது. இவர் புவியியலிலும் பொறியியலிலும் பாய்ம இயக்கவியலிலும் இரண்டு முதுவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவுரா_கெர்பர்&oldid=2719098" இருந்து மீள்விக்கப்பட்டது