இலவம் பஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலவம் பஞ்சு விதைகளுடன் காட்சித்தருகிறது

இலவ மரம் என்னும் மால்வேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரம் உற்பத்திச் செய்யும் காய்களில் இருந்து பெறப்படும் நார் பொருள் இலவம் பஞ்சு ஆகும். இதன் பஞ்சைப் பட்டுப் பஞ்சு என்றும் அழைப்பர். இதற்குக் காரணம் பஞ்சில் உள்ள மினுமினுப்பும் அதன் கவர்ச்சிகரமானத் தோற்றமும் பட்டை போல் இருப்பது தான். [1].


  • வெள்ளை நிறத்தில் மினுமினுப்புடன் காணப்படும்.
  • நீருருஞ்சும் தன்மை அற்றது.
  • அதிகப்படியான மிதக்கும் தன்மையுள்ளது (30 மடங்கு எடையைத் தாங்கக்கூடியதும், நீரில் மிதக்கும் தக்கையைவிட ஏழுமடங்கு மிதக்கும் தன்மையுடையது.)
  • எளிதில் தீப்பற்றக்கூடியது

பயன்கள்[தொகு]

  • இப் பஞ்சு மென்மையானதாகவும் உறுதியற்றும் இருப்பதால் நூல் நூற்கப் பயன்படுவதில்லை.
  • இது மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறை போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவம்_பஞ்சு&oldid=2985229" இருந்து மீள்விக்கப்பட்டது