இலங்கை கிழவோன்
Appearance
ஓய்மான் நாட்டின் தலைநகர் இலங்கை. சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் இதனை 'நன்மாவிலங்கை' என்று குறிப்பிடுகிறது. அத்துடன் 'தொன்மாவிலங்கை' என்பதிலிருந்து வேறுபட்டது என்பதையும் குறிப்பிடுகிறது.
ஓய்மான் நல்லியக்கோடன், ஓய்மான் வில்லியாதன் ஆகியோர் இலங்கையைத் தலைநகராகக் கொண்டு ஓய்மான் நாட்டை ஆண்டுவந்த சங்ககால மன்னர்கள் எனப் புலவர் நன்னாகனார் குறிப்பிடுகிறார்.
ஓய்மான் நல்லியக்கோடன் 'ஓவியர் பெருமகன்' என்று போற்றப்படுகிறான். இதனால் ஓய்மானாட்டு மக்கள் ஓவியர் குடியினர் என்பதை உணரமுடிகிறது.
தற்போது திண்டிவனத்தை அடுத்துள்ள இலங்கை என்னும் ஊரே சங்ககாலத்து நன்மாவிலங்கை எனத் தெரியவருகிறது. (1)
மேற்கோள்
[தொகு](1) டாக்டர் மா. இராசமாணிக்கனார், 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி', சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு.