இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இலங்கையின் அரச உரிமையுடைய காப்புறுதி நிறுவனமாகும். இலங்கை அரசாங்கத்தின் நிதி, திட்டமிடல் அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனமாக செயற்படுகின்றது. 2012ம் ஆண்டு தை மாதம் முதல் திகதியன்று தனது 50வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியதன் மூலம் இலங்கையின் நீண்ட வரலாற்றைக் கொண்ட முதற் காப்புறுதி நிறுவனமாகின்றது. இலங்கைக் குடிமக்களின் ஆயுட் காப்புறுதித் தேவைகளையும், பொதுக் காப்புறுதித் தேவைகளையும் முன்நின்று வழங்கும் முதற்தர நிறுவனமாகும். குறைந்த முதலீட்டுடன் அதிகளவான பங்கினை வழங்கும் ஒரேயொரு நிறுவனமாகவும் அமைகின்றது.


வெளி இணைப்புகள்[தொகு]