இலங்கு வானூர்தி விபத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலங்கு வானூர்தி விபத்துக்கள் பல இந்திய அரசியல்வாதிகளைப் பலி கொண்டுள்ளன. முக்கியமான சில விபத்து விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1980 ஜூன் 21[தொகு]

பலியானவர்[தொகு]

சஞ்சய் காந்தி. இவர் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் இளைய மகன்.

1997 நவம்பர் 17[தொகு]

பலியானவர்[தொகு]

என்.வி.என்.சோமு. இவர் மத்திய அரசில் ராணுவத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய போது பயணித்த உலங்கு வானூர்தி, அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

2001 மே[தொகு]

பலியானவர்[தொகு]

நாதுங். இவர் அருணாசலப் பிரதேசத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர்.

2001 செப்டம்பர் 30[தொகு]

பலியானவர்[தொகு]

மாதவராவ் சிந்தியா. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கிய இடம் வகித்த இவர், மத்திய அமைச்சரையில் பங்கேற்றிருந்தவர்.

2002 மார்ச் 3[தொகு]

பலியானவர்[தொகு]

பாலயோகி. வாஜ்பாயி பிரதமராக இருந்த போது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர். ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசக் கட்சியின் முக்கிய இரண்டாம் மட்டத் தலைவராக இருந்தார்.

2004 ஏப்ரல் 17[தொகு]

பலியானவர்[தொகு]

சௌந்தர்யா. தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வளர்ந்து வந்த ஒரு நடிகை. பாஜக-வின் உறுப்பினராக இருந்தார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பெங்களூர் சென்றிருந்த போது விபத்து நேரிட்டது.

2004 செப்டம்பர்[தொகு]

பலியானவர்[தொகு]

சங்மா. மேகாலயாவின் இனத் தலைவர். இவருடன் மூன்று மேகாலயா சட்டமன்ற உறுப்பினர்களும் மரணமடைந்தனர்.

2005 மார்ச் 30[தொகு]

பலியானவர்[தொகு]

ஓ.பி.ஜிந்தால். இவர் ஹரியானா மின்துறை அமைச்சராக இருந்தார்.

2009 செப்டம்பர் 2[தொகு]

பலியானவர்[தொகு]

ராஜசேகர ரெட்டி. ஆந்திர முதல்வராக இரண்டு முறை இருந்தவர். சித்தூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் சென்ற இலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியது.

குறிப்புதவி[தொகு]

1.டைம்ஸ் ஆஃப் இந்தியா இணைய தளம் 2. என்.டி.டி.வி. இணையதளம் (http://www.ndtv.com/news/india/how_safe_are_choppers.php 3. தினத்தந்தி 04.09.09 மதுரைப் பதிப்பு செய்திக் கட்டுரை (பக்கம் 13)