இலகாபாய் பர்வாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலகாபாய் பர்வாது (Lakhabhai Bharwad) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். குசராத்து மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், குசராத்து காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார். 2017 ஆம் ஆண்டில் விரம்காம் தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் தேச்சிறீ பட்டேலை 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் பயிர் இழப்புகளால் ஏற்பட்ட தற்கொலை குறித்த தரவுகளைக் கோரி, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை பர்வாது எழுப்பினார். [2] இவரது கேள்விகளின் காரணமாக, குசராத்து அரசு 585 கோடி ரூபாயை (சுமார் 78.5 மில்லியன் அமெரிக்க டாலர்) டாடா மோட்டார் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது தெரியவந்தது.[3] தற்போது, பர்வாது இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியுடன் தொடர்புடையவராக குசராத்து அரசியலில் இயங்குகிறார். [4] இவருக்கு குற்றவியல் நடவடிக்கை தொடர்பான பதிவு எதுவும் இல்லை, என்றாலும் 22,80,000 ரூபாய் கடனாளியாக உள்ளார். 1983 ஆம் ஆண்டில் குசராத்து பல்கலைக்கழகத்தில் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5] தொழிலில் விவசாயியாகவும் சமூக சேவகர் மற்றும் கால்நடை வளர்ப்பாளராகவும் சமுகத்தில் வாழ்கிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Raj (2017-12-18). "Gujarat Election Results 2017: Most Congress turncoats lose, prominent party leaders trounced". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  2. "26 farmers committed suicide in 5 yrs: Gujarat govt". The Indian Express (in ஆங்கிலம்). 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  3. Kapil Dave (Sep 26, 2018). "Gujarat govt paid Rs 585 crore as soft loan to Tata Motors | Ahmedabad News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  4. "Lakhabhai Bhikhabhai Bharwad". Our Neta (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  5. 5.0 5.1 "Bharwad Lakhabhai Bhikhabhai(Indian National Congress(INC)):Constituency- VIRAMGAM(AHMEDABAD) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகாபாய்_பர்வாது&oldid=3917762" இலிருந்து மீள்விக்கப்பட்டது