இரெபா ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெபா ரே
Reba Ray
பிறப்பு1876 (1876)
இறப்பு1957
தொழில்கவிஞர், கல்வியாளர்
மொழிஒடியா
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அஞ்சலி

இரெபா ரே (Reba Ray) இந்தியாவின் ஒடியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். கல்வியாளர் மற்றும் நிர்வாகி என்ற பன்முகங்களுடன் இவர் இயங்கினார். ஆரம்பகால ஒடியா பெண் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்ட இவர், கட்டாக்கில் உள்ள மாதிரி பெண்கள் பள்ளியின் நிறுவனரும் ஆவார். இவரது சிறுகதையான சன்யாசி என்ற சிறுகதை ஒரு பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட ஆரம்பகால நவீன ஒடியா சிறுகதையாக கருதப்படுகிறது. [1] புகழ்பெற்ற ஒடியா கவிஞர் மதுசூதன் ராவின் மருமகள் என்றும் இவர் அறியப்பட்டுகிறார். 1876 ஆம் ஆண்டு பிறந்த இரெபா ரே 1957 ஆம் ஆண்டு இறந்தார்.[2]

தொழில்[தொகு]

பெண் கல்விக்கு முன்னோடியாக இருந்தார். 1906 ஆம் ஆண்டு கட்டாக்கில் மாதிரி பெண்கள் பள்ளியை நிறுவினார். அதில் இசை மற்றும் தையல் கற்றுக்கொடுக்கும் வசதி இருந்தது. 1892 ஆம் ஆண்டு ஆசா என்ற பெண்கள் பத்திரிகையை நிறுவினார். ஒடிசாவின் முதல் குழந்தைகள் பத்திரிகையான பிரபாத் என்ற பத்திரிகையையும் இவர் நிறுவினார். [3] உத்கல் சாகித்யா இதழிலும் இவரது கதைகள் வெளியாகின. குகாலி, இயாச்பூரில் மற்றொரு பள்ளியை நிறுவினார். [4]

வெளியிடப்பட்ட படைப்புகள்[தொகு]

  • அஞ்சலி, 1903 [5]
  • சகுந்தலா, 1904 [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Venkatesh, M.R. (2019-12-09). "A rich anthology of stories from Odisha mirror many worlds in one text". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2020-04-06.
  2. Mohanty, S. (2005). Early Women's Writings in Orissa, 1898-1950: A Lost Tradition. SAGE Publications. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3308-3. https://books.google.com/books?id=WAicQsB1jkgC. பார்த்த நாள்: 2020-04-06. 
  3. "It's a tough job to run an Oriya children's magazine". The New Indian Express. 2009-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  4. Choudhury, Ramadevi; Kar, Supriya (2015). "Journey of Life". Indian Literature 3 (287): 39–51. 
  5. 5.0 5.1 Mohanty, S. (2005). Early Women's Writings in Orissa, 1898-1950: A Lost Tradition. SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3308-3. https://books.google.com/books?id=WAicQsB1jkgC. பார்த்த நாள்: 2020-04-06. Mohanty, S. (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெபா_ரே&oldid=3425652" இலிருந்து மீள்விக்கப்பட்டது