இருவளைய பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருவளைய பாசுபேட்டு (Bicyclic phosphate) என்பது இருவளைய கரிமபாசுபேட்டுகளின் ஒரு வகையாகும். தீத்தடுப்பு, நிலைநிறுத்தி, ஆக்சிசனேற்றத் தடுப்பு போன்ற செயல்பாடுகளுக்காக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. நிறமாலை ஆய்வுகளிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [1][2].

மூவிணைய-பியூட்டைல்பைசைக்ளோபாசுபரோதயோனேட்டு, மூவிணைய-பியூட்டைல்பைசைக்ளோபாசுபேட்டு, ஐசோபுரோப்பைல் பைசைக்ளோபாசுபேட்டு போன்ற இருவளைய பாசுபேட்டுகள் மிகுந்த நச்சுதன்மை கொண்டவையாகும். இவற்றின் நச்சுத்தன்மை நரம்புக் கடத்திகளின் நச்சுத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கவையாகும். இருப்பினும் இவற்றை அசிட்டைல்கோலினெசுட்ரேசு தடுப்பியாக கருதுவதில்லை[1]. இவை காம்மா-அமினோபியூட்டைரிக் அமில ஏற்பி எதிர்ப்பியாகச் செயல்படுகிறது. மேலும் வலிப்பூக்கி விளைவுகளை உண்டாக்கும் திறன் கொண்ட்தாகவும் உள்ளது[2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bellet, E. M.; Casida, J. E. (14 December 1973). "Bicyclic Phosphorus Esters: High Toxicity without Cholinesterase Inhibition". Science 182 (4117): 1135–1136. doi:10.1126/science.182.4117.1135. Bibcode: 1973Sci...182.1135B. https://archive.org/details/sim_science_1973-12-14_182_4117/page/1135. 
  2. 2.0 2.1 Gupta, Ramesh C., தொகுப்பாசிரியர் (2009). Handbook of toxicology of chemical warfare agents (1st ). London: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123744845. 
  3. BOWERY, N. G.; COLLINS, J. F.; HILL, R. G. (17 June 1976). "Bicyclic phosphorus esters that are potent convulsants and GABA antagonists". Nature 261 (5561): 601–603. doi:10.1038/261601a0. Bibcode: 1976Natur.261..601B. https://archive.org/details/sim_nature-uk_1976-06-17_261_5561/page/601. 
  4. Ellison, D. Hank (2007). Handbook of chemical and biological warfare agents (2nd ). Boca Raton, Fla.: CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849314346. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவளைய_பாசுபேட்டு&oldid=3521062" இலிருந்து மீள்விக்கப்பட்டது