உள்ளடக்கத்துக்குச் செல்

இருள் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருள் எண்

ஒரூஉ எண்
முதல் 16 ஒரூஉ எண்கள் மற்றும் இருள் எண்கள்

எண் கோட்பாட்டில், இருள் எண் (evil number) என்பது அதனது இரும எண் வடிவில் இரட்டை எண்ணிக்கையிலான ஒன்றுகளை ('1') கொண்டதொரு நேர்ம முழுவெண்ணாகும்[1] . இருள் எண்களாக இல்லாத எதிர்மமல்லா முழுவெண்கள் ஒரூஉ எண்களென அழைக்கப்படுகின்றன.

கணினி அறிவியலில் ஓர் இருள் எண்ணானது இரட்டை நிகரியுடையதாகக் கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

துவக்க இருள் எண்கள்:

0, 3, 5, 6, 9, 10, 12, 15, 17, 18, 20, 23, 24, 27, 29, 30, 33, 34, 36, 39 ...[1]

சமமான கூட்டுத்தொகைகள்

[தொகு]

ஒரூஉ எண்களாக இல்லாத எதிர்மமில்லா முழுவெண்கள் "இருள் எண்"களென அழைக்கப்படுகிறன. ஒரூஉ எண்களும் இருள் எண்களும் சேர்ந்து எதிர்மமில்லா முழுவெண்களை சோடிவாரியான கூட்டுத்தொகையுடைய சமமான இரு பல்கணங்களாகப் பிரிக்கின்றன. இது தனித்துவமான பிரிப்பாக இருக்கும்.[[2] to , வரையிலான நேர்ம முழு எண்களின் இவ்வாறான பிரிப்பானது , அடுக்குகள் வரை சமமான கூட்டுத்தொகையுடைய எண்களின் கணங்களைக் காண்பதற்கு உதவுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sloane, N. J. A. (ed.), "Sequence A001969 (Evil numbers: numbers with an even number of 1's in their binary expansion)", நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம், நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை
  2. Lambek, J.; Moser, L. (1959), "On some two way classifications of integers", Canadian Mathematical Bulletin, 2 (2): 85–89, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4153/CMB-1959-013-x, MR 0104631
  3. Wright, E. M. (1959), "Prouhet's 1851 solution of the Tarry-Escott problem of 1910", American Mathematical Monthly, 66 (3): 199–201, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2309513, JSTOR 2309513, MR 0104622
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருள்_எண்&oldid=3935285" இலிருந்து மீள்விக்கப்பட்டது