இருமையியம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இருமையியம் (Dualism) அல்லது இருமைவாதம் என்பது, இரண்டு பகுதிகளாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது. இது முன்னர் இணையாக நிலைத்திருக்கின்ற இரட்டை எதிர்மறைகளைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சொல் மீவியற்பியல், மெய்யியல் இரட்டைத்தன்மை என்பன தொடர்பான உரையாடல்களில் பயன்பட்டது. ஆனால், பிற்காலத்தில் இது இன்னும் பொதுமையாக்கப்பட்டு இரண்டு பகுதிகளாகக் காணப்படும் எந்தவொரு முறைமை தொடர்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது.
நல்ல, தீய என்பவற்றுக்கு இடையிலான மிகைநிரப்பும் தன்மை அல்லது முரண்பாடு தொடர்பான நம்பிக்கை ஒழுக்க இருமையியம் எனப்படுகிறது. அறநெறி என்றால் என்ன என்ற விளக்கத்தையோ, அல்லது அவை எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதையோ சாராமல் இரண்டு அறவியல் எதிர்மறைகள் இருக்கின்றன என்பதை இது குறிக்கின்றது.