இராயக்கோட்டை தெருக்கூத்துக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் இராயக்கோட்டை இங்கு இப்போதும் சிறப்பாக ஆண்டுதோறும் தெருக்கூத்து நடந்துவருகிறது.

கூத்து நடைபெறும் இடம்[தொகு]

இராயக்கோட்டையிலிருந்து சூளகிரி சாலையில் உள்ள 1920இல் கட்டப்பட்ட துரோபதியம்மன் கோயில் அருகில். இக்கோயிலின் சார்பில் நடைபெறும் கூத்தைச் சுமார் 20 ஊர்காரர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள்.

கூத்து நடைபெறும் காலம்[தொகு]

ஆண்டுதோறும் வைகாசிமாதம் இங்குக் கூத்து நடக்கிறது. 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. தலைசிறந்த கலைஞர்களைக்கொண்டு 18 நாட்கள் பாரதக் கதையை நாள்தோறும் பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்குப் பிறகு இரவு 10 மணிக்குத் தெருக்கூத்து ஆரம்பமாகிவிடும். இந்த 18 நாளும் பாரதக் கதையைச் சுவைபட கூத்தாக நடிப்பார்கள்[1]

குறிப்புகள்[தொகு]

  1. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட கருத்தரங்க மலர் 10.11.2009, இராயக்கோட்டை தெருக்கூத்துக் கலை-கவியருவி நாகராசன்.