இராமன் இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமன் இயந்திரம்
Raman Engine
பயன்பாடுஏவூர்தி உந்து எரிபொருள்
குறிப்பிடத்தக்க ஆய்வுகள்
2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதி சோதிக்கப்பட்டது
கண்டுபிடித்தவர்இசுகைரூட் ஏரோசுபேசு
தொடர்புடைய கருவிகள்துல்லியமான சுற்றுப்பாதை சரிசெய்தல்

இராமன் இயந்திரம் (Raman Engine) என்பது ஈருந்துபொருள் ஏவூர்தி இயந்திரம் ஆகும். இசுகைரூட் ஏரோசுபேசு என்ற இந்திய தனியார் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் விக்ரம் குடும்பவகை ஏவூர்திகளில் இராமன் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.[1] நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர் சர் சி.வி. ராமன் நினைவாக இந்த இயந்திரத்திற்கு இராமன் இயந்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

விளக்கம்[தொகு]

சமச்சீரற்ற இருமெத்திலைதரசீன், இருநைட்ரசன் டெட்ராக்சைடு ஆகிய உந்து பொருள்களை இராமன் இயந்திரம் பயன்படுத்தும். இவ்வுந்து பொருள்களைப் பயன்படுத்தினால் இராமன் இயந்திரம் தன்னிச்சையாகத் தானே தீப்பற்றிக் கொள்ளுன் வசதியைப் பெறுகிறது.[2] இதன் உட்செலுத்தும் தட்டு முற்றிலும் முப்பரிமானப் பொருளாள் அச்சிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் விக்ரம் 1 ஏவூர்தியில் 4 திரள்களில் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு திரளும் 3.4 கிலோநியூட்டன் உந்துதலை உருவாக்கி 850 நியூட்டன் உந்துதலை உற்பத்தி செய்யும். இது பல ஏவூர்தி இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. ஆனால் துல்லியமான சுற்றுப்பாதை சரிசெய்தலுக்கு இந்த இயந்திரம் தேவைப்படுகிறது.[3][4]

வளர்ச்சி மற்றும் சோதனை[தொகு]

2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இசுகைரூட் ஏரோசுபேசு நிறுவனம் முதன்முறையாக இராமன் இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதித்தது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "First Indian start-up firm Skyroot Aerospace to test fire rocket engine 'Raman': All you need to know". Jagranjosh.com. 2020-08-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  2. Skyroot Aerospace: Raman Engine Test Fire (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-25
  3. "With ISRO assistance, India's Skyroot Aerospace aims maiden rocket launch by Dec-2021". WION (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  4. Exclusive Details of Skyroot's Raman Engine (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-25
  5. Narasimhan, T. E. (2020-08-12). "Skyroot Aerospace first private company to test upper stage rocket engine". Business Standard India. https://www.business-standard.com/article/companies/skyroot-aerospace-first-private-company-to-test-upper-stage-rocket-engine-120081200445_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமன்_இயந்திரம்&oldid=3379617" இலிருந்து மீள்விக்கப்பட்டது