உள்ளடக்கத்துக்குச் செல்

இராமச்சந்திரன் கலைமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமச்சந்திரன் கலைமதி (Ramachandiran Kalaimathi) என்பவர் புதிதாக நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதி ஆவார். இவர் புதுச்சேரி சட்டக் கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பினை முடித்துள்ளார்.

நீதிபதி பணி

[தொகு]

கலைமதி 1995-ல் நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பதவி வகித்தார்.[1]

உயர்நீதிமன்ற நீதிபதியாக

[தொகு]

2023ஆம் ஆண்டு சனவரி மாதம் 17-ந் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் படி மாவட்ட நீதிபதியாக இருந்த கலைமதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கலைமதி சென்னை, மதராஸ் உயர் நீதிமன்ற நீதிபதியாக பிப்ரவரி 7ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார்.[2]

குடும்பம்

[தொகு]

நீதிபதி கலைமதியின் பெற்றோர் இராமச்சந்திரன் அனுசியா ஆவர். கலைமதியின் கணவர் மருத்துவர் இரவிக்குமார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://njdg.ecourts.gov.in/njdgv1/njdg_reports_public/courtjudge_details_public.php?lvl=three&lvl_state_code=10&lvl_dist_code=12
  2. "5 new Madras high court judges to be sworn in today". The Times of India. 2023-02-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  3. தினத்தந்தி (2023-02-08). "சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமச்சந்திரன்_கலைமதி&oldid=3968357" இலிருந்து மீள்விக்கப்பட்டது