இராபெர்ட் ஆலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராபெர்ட் ஆலைன் (Robert Alaine) (அண். 1576) இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் காலத்தில் ஒரு நிலக்கிழாரிடம் அலுவலராகப் பணிபுரிந்தவர். இவரது வானியல் கருவிகளைப் பற்றிய விரிவான நூலாகிய, ஆலைனின் வானியல் மிகவும் பெயர்பெற்றதாகும். இந்நூல் இன்றும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரி நூலகத்தில் பேணிக் காக்கப்படுகிறது.[1] இந்த நூல் இந்நூலகத்துக்குச் சர் எடுவார்டு சுட்டன்கோப்பால் வழங்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rose, Hugh James (1857). "Alaine, Robert". A New General Biographical Dictionary 1 AA–ANS. London: B. Fellowes et al. 
  2. "Alaine's Astronomy". Trinity College Library Catalogue of Medieval Manuscripts. Archived from the original on 2017-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபெர்ட்_ஆலைன்&oldid=3593434" இலிருந்து மீள்விக்கப்பட்டது