இராபர்ட் பிங்காம்
இராபர்ட் சியார்ச்சு பிங்காம் (Robert George Bingham) இங்கிலாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பனிப்பாறை மற்றும் புவி இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். [1] ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக பிங்காம் நன்கு அறியப்படுகிறார். நவீன பனிப்பாறை மாற்றம் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ள புவி இயற்பியல், தொலைநிலை உணர்திறன் மற்றும் படிமமாக்கல் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இவரது ஆராய்ச்சிகள் கவனம் செலுத்துகின்றன. மேலும், கடைசி பனியூழிக் காலத்தின் முடிவில் வடக்கு அரைக்கோளப் பனிப்பாறைகள் பின்வாங்குவதன் மூலம் விட்டுச் செல்லப்பட்ட நிலப்பரப்புகளைப் புரிந்துகொள்வதிலும் இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. துருவப் பனிக்கட்டி மாற்றத்தின் காரணங்களையும், உலக கடல் மட்டங்களுக்கு இவற்றின் பங்களிப்புகளையும் இவரது ஆய்வுகள் விவரிக்கின்றன.
2013 ஆம் ஆண்டில் இவருக்கு துருவப் பதக்கம் வழங்கப்பட்டது. இவ்விருது துருவப் பகுதிகள் பற்றிய அறிவைப் பெறுவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக மிகுந்த இன்னல்களுக்கிடையே துருவப் பயணங்களை மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதாகும். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Robert Bingham". www.geos.ed.ac.uk.
- ↑ "Honours and Awards". The London Gazette (60703). 2 December 2013. https://www.thegazette.co.uk/London/issue/60703/supplement/23845/data.pdf.