இரத்தம் பதப்படுத்தலில் நிறப்பகுப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருதி பதப்படுத்தலில் நிறப்பகுப்பியல் (Chromatography in blood processing)என்பது குருதிக்கணிகத்தைத் தூய்மிக்கவும் வேண்டிய புரதத்தைப் பிரித்தெடுக்கவும் 1984 களில் இருந்து உதவுகிறது.குருதிக்கணிகம் என்பது இரத்தத்திலுள்ள நீர்மப் பகுதி. இதில் கரைந்த புரதம், ஊட்டச்சத்துக்கள், அயனிகள்,பிற கரையும் பொருட்கள் காணப்படுகின்றன. இரத்தத்தில் காணப்படும் சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுகள் ஆகியவை இந்த குருதிந்ர்ர்மத்தில் தான் மிதந்து கொண்டிருக்கும். குருதி நீரைத் தூய்மைப்படுத்துவதின் நோக்கமே இரத்தத்திலுள்ள குறிப்பிட்ட பகுதிகளை பிரித்தெடுத்து அவற்றைச் சரிசெய்யவும் மறுசீரமைப்பு செய்து பயன்படுத்துவதற்காகத் தான். இந்தக் குருதிக் கணிகம் பல்வேறு பகுதிகளால் உருவாக்கப் பட்டுள்ளது. அவற்றில் முதமையான ஒன்று புரத அல்புமின் என்று சொல்லக்கூடிய கருப்புபுரதம் ஆகும். இது மிக அதிகமாக தண்ணீரில் கரையக்கூடிய ஒரு புரதம். அது மட்டுமல்லாது இது நிலையானக் கட்டமைப்புக் கொண்டதும் ஆகும். இது இயக்குநீர்கள்(இசைமங்கள்), நொதிகள்,கொழுப்பு அமிலங்கள், உலோக அயனிகள், மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்து ஊடகமாக செயல்படுகிறது. மறுசீரமைப்பும் மீட்டமைப்பும் தவிர்க்க இயலாத சூழ்நிலையாகிய அறுவையின்போது இரத்த ஓட்டத்தை கட்டுபடுத்துவதில் முதன்மைப் பங்கு வகிப்பதால் மருத்துவ சிகிச்சைகளின்போது தூயக் குருதிக்கணிகம் பயன்படுத்தப் படுகிறது. அப்பழுக்கற்ற மிகவும் தூயக் குருதிக்கணிகத்தைக் கையிறுப்பில் வைத்திருப்பதுஈன்றியமையாததாகும். குருதிக்கணிகம் மாந்த உடலுக்குத் மிகவும் தேவையான ஒன்றாகும்.1980 களிலிருந்தே நிறப்பகுப்பியல் இரத்தப் பதப்படுத்தலுக்கும் தூய்மைப்படுத்தலுக்கும் உதவுகிறது. அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத்தின் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதில் இந்த நிறப்பகுப்பியல் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

நிறப்பகுப்பியலின் வளர்ச்சி[தொகு]

இரத்தத்தில் இருந்து குருதிக்கணிகத்தைப் பிரித்தெடுக்க நிறப்பகுப்பியல் முறை 1980 களின் தொடக்கத்தில் பயன்படலானது. சோன் பின்னப் பிரிப்பிற்கும் (1946) நிறப்பகுப்பியல் தொடங்கப் பட்ட வருடமாகிய 1983 க்கும் இடையில் இந்த முறை படிமலர்ந்தது. 1962இல் கிசுட்ரும் நிசுட்சுமனும் உருவாக்கிய செயல்முறை நடைமுறைக்கு வந்தது. இந்த முறை சோன் செயல் முறையில் இருந்து உருவாக்கப் பட்டதாகும். 1983 களில் நிறப்பகுப்பியல் முழு வடிவம் பெறத் தொடங்கியது. 1990 களில் செனலப், சி.எஸ்.எல். செயல்முறைகள் உருவாக்கப் பட்டன. இவை நிறபகுப்பியலைச் சில மாற்றங்களுக்குப் பிறகு, தம்முறைகளோடு இணைத்துக் கொண்டன.

மேற்கோள்கள்[தொகு]