இரத்தன் லால் ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தன் லால் ஜோஷி (Ratan Lal Joshi) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், பத்திரிகையாளரும், எழுத்தாளரும் ஆவார். 1922 ஆம் ஆண்டு சூன் 28 ஆம் தேதி இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பாலைவன நகரமான சூரூவில் பிறந்த இவர், 18 வயதிலிருந்தே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறைவாசம் அனுபவித்தார்.[1] பத்திரிகையை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுத்த இவர், மகாத்மா காந்தி நிறுவிய ஹரிஜன் என்ற வார இதழில் சேர்ந்தார். அப்போதைய அப்பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரான கிசோரலால் பாய் மஷ்ருலாவாவின் கீழ் பயிற்சி பெற்றார்.[2] பின்னர், இவர் பல பதிப்பகங்களில் பணிபுரிந்தார். மேலும் பாய்-பாஹின், சமாஜ் சேவக், வீர் பூமி, ராஜஸ்தான், ராஜஸ்தான் சமாஜ் மற்றும் குல் லட்சுமி போன்ற பத்திரிகைகளைத் திருத்தியுள்ளார். லால் கில் மெயின், கிராந்திகரி ப்ரே நே கே ஸ்ரோட் மற்றும் மிருத்யுஞ்சய் ஆகிய மூணு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஜோசி பல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட சகித் சமாரக ஈவம் சுவாதிநாதா சங்கிராம் சோத் சனசுதான், மற்றும் அகில இந்திய சுதந்திர போராளிகள் அமைப்பு போன்றவற்றின் செயலாளராகவும் மற்றும் ராஜஸ்தான் சுதந்திர போராளிகள் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். 1970 களின் முற்பகுதியில் இவர் இந்திரா காந்தியின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார்.[3][4] இவர் 2006 செப்டம்பர் 19, அன்று, மும்பையில், தனது 84 வயதில் இறந்தார்.[1]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Freedom fighter Ratan Lal Joshi is dead". Web India News. 19 September 2006. Archived from the original on 7 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Freedom Fighter Ratan Lal Joshi passes away in Mumbai". Karmayog. 18 September 2006. Archived from the original on 30 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Was Lal Bahadur Shastri a 'personal servant' of Jawahar Lal Nehru rather than his successor?". News Gram. 22 April 2015. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தன்_லால்_ஜோசி&oldid=3927762" இலிருந்து மீள்விக்கப்பட்டது