இரண்மை சென் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்மை சென் குப்தா
Hiranmay Sen Gupta
பிறப்பு1 ஆகத்து 1934 (1934-08-01) (அகவை 89)
பரிசால், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு8 சனவரி 2022(2022-01-08) (அகவை 87)
டாக்கா, வங்காளதேசம்
தேசியம்வங்காளதேசியர்
துறைஅணுக்கரு இயற்பியல்
பணியிடங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்டாக்கா பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இயோசப் ரோட்பிளாட்டு
துணைவர்சுச்சரிதா சென் குப்தா

இரண்மை சென் குப்தா (Hiranmay Sen Gupta, ஆகத்து 1, 1934 – சனவரி 8, 2022) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். 1934 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். அணு இயற்பியலில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். [1] சுமார் 200 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதல் வங்காளதேச அறிவியல் அகாதமியில் உறுப்பினராக உள்ளார். [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1963 ஆம் ஆண்டு இரண்மை சென் குப்தா இயோசப் ரோட்பிளாட்டின் மேற்பார்வையில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். [2]

தொழில்[தொகு]

1955 ஆம் ஆண்டுக்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடையில் சென் குப்தா டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 1973 - 1976 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் ஆய்வகத்திலும், 1981-1982 ஆம் ஆண்டுகளில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையிலும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். 1982-1992 ஆம் ஆண்டுகளில் இத்தாலியில் உள்ள திரைசுட்டே நகரில் இருக்கும் தத்துவார்த்த இயற்பியலுக்கான அப்துசு சலாம் பன்னாட்டு மையத்தில் மூத்த இணைப்பேராசியராக இருந்தார். [2]

விருதுகள்[தொகு]

  • எச்பி ராய் தங்கப் பதக்கம் (1967)
  • A. ராப் சவுத்ரி தங்கப் பதக்கம் (1975)
  • சோனாலி வங்கி தங்கப் பதக்கம் (1984)
  • இப்ராகிம் தங்கப் பதக்கம் (1992) [2]

மறைவு[தொகு]

இவர், சனவரி 8, 2022 அன்று தனது 87 வயதில் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen Gupta, H. M. "Microsoft Academic Search". Archived from the original on 2016-05-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  2. 2.0 2.1 2.2 2.3 Sen Gupta, H. M. "Professor H.M. Sen Gupta". Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  3. Nuclear physicist Hiranmay Sen Gupta dies. The Financial Express. https://thefinancialexpress.com.bd/national/nuclear-physicist-hiranmay-sen-gupta-dies-1641641537. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்மை_சென்_குப்தா&oldid=3543980" இலிருந்து மீள்விக்கப்பட்டது