இரண்டாவது அனைத்துலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாவது அனைத்துலகம் (The Second International 1889–1916) என்பது சமவுடமைக் மற்றும் தொழிலாளர் கட்சிகளால் யூலை 14, 1889 இல் பாரிசில் நிறுவப்பட்ட ஒர் அமைப்பு ஆகும். இந்த பாரிசு மாநாட்டில் 20 நாடுகளைச் சார்ந்த சார்பாளர்கள் கலந்து கொண்டனர். இது முதலாவது அனைத்துலகத்தின் பணியை தொடர்ந்து முன்னெடுத்தது. இந்த அமைப்பில் இருந்து Anarcho-syndicalism மற்றும் Trade union ஆகியோர் அனுமதிக்கப்படவில்லை.

மே 1 திகதியை அனைத்துலக தொழிலாளர் நாளாக அறிவித்தது, மார்ச் 8 அனைத்துலக பெண்கள் நாளாக அறிவித்தது, 8 மணி வேலை நேரத்திற்கான கோரிக்கையை முன்வைத்தது ஆகியவை இரண்டாவது அனைத்துலகத்தின் முக்கிய செயற்பாடுகளில் சில.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாவது_அனைத்துலகம்&oldid=2750955" இலிருந்து மீள்விக்கப்பட்டது