இரண்டாம் பிரவரசேனன் (வத்சகுல்ம வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் பிரவரசேனன்
மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 400 - 415 பொ.ச.
முன்னையவர்விந்தியசேனன்
பின்னையவர்இரண்டாம் சர்வசேனன்
மரபுவாகாடகப் பேரரசு

இரண்டாம் பிரவரசேனன் ( Pravarasena II ) ( ஆட்சிக்காலம் சுமார் 400 – 415 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் வத்சகுல்ம கிளையின் ஆட்சியாளர் ஆவார். இவர் விந்தியசேனனின் மகனும் வாரிசும் ஆவார்.

இவர் ஒப்பீட்டளவில் குறுகிய மற்றும் சீரற்ற ஆட்சியைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இவர் சீக்கிரமே இறந்த காரணத்தல் இவரது எட்டு வயதுடைய மகன் ஆட்சிக்கு வந்தான்.[2] இந்த இளம் வாரிசு பற்றிய பெயர் தெரியவில்லை. ஏனெனில் இவரது பெயர் வாகாடக வம்சத்தின் பரம்பரையை வழங்கிய அஜந்தா கல்வெட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இல்லை. இருப்பினும், இரண்டாம் சர்வசேனன் இரண்டாம் பிரவரசேனனின் மகனும் வாரிசுமென இப்போது அறியப்படுகிறது. [3]

'தர்ம-மகாராஜா' என்ற பட்டத்தைப் பயன்படுத்திய இவரது புகழ்பெற்ற மூதாதையர்களைப் போலல்லாமல், இரண்டாம் பிரவரசேனன் 'மகாராஜா' என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். இதை இரண்டாம் சர்வசேனனும் தொடர்ந்தார்.[4]

சான்றுகள்[தொகு]

  1. The Vakataka-Gupta Age. 
  2. D.C. Sircar (1997). Majumdar, R.C.. ed. The Classical Age (Fifth ). Bharatiya Vidya Bhavan. பக். 186. 
  3. Shastri (1997). Vakatakas: Sources and History. Aryan Books International. பக். 229. 
  4. Bakker, Hans (1997). The Vakatakas: An Essay in Hindu Iconology. Groningen: Egbert Forsten. பக். 33-34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9069801000.