இரட்டைநாக பந்தம்
Appearance
இரட்டைநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. இரண்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும். இரண்டு அல்லது நான்கு அடிகள் கொண்ட விருத்தம் ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும். பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும். சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவார்.